கடந்த மாதம் தூத்துகுடியில் ஒரு இளைஞர் திருமணம் ஆகாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் சிதம்பரம் அடுத்து காட்டுமன்னர்கோவில் தாலுகா வடமூரை சார்ந்தவர் கூலித்தொழிலாளி பாலகிருஷ்ணன்.
இவர் மகன் ரவிசந்திரன்(29) ,இவருக்கு திருமணம் செய்து வைக்க பல இடங்களில் பெண் பார்த்து உள்ளனர்.ஆனால் இதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு முறையும் திருமணம் தடைபட்டு வந்து உள்ளது.
ஒவ்வொரு முறையும் திருமணம் தடைபட்டு வந்ததால் ரவிசந்திரன் கடந்த சில மாதங்களாக மன வருத்தத்தில் இருந்து வந்து உள்ளார்.இந்நிலையில் கடந்த 19-ம் தேதி ரவிசந்திரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து உள்ளார்.
ரவிசந்திரன் தற்கொலை செய்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.அங்கு தீவிர சிகிக்சை பிரிவில் ரவிச் சந்திரனுக்கு சிகிக்சை கொடுக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ரவிசந்திரன் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து சிதம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக