Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

ஏழைகளின் கோவா... மணப்பாடு கடற்கரை !!

 Image result for ஏழைகளின் கோவா... மணப்பாடு கடற்கரை !!
தூத்துக்குடியில் இருந்து ஏறத்தாழ 53கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியில் இருந்து ஏறத்தாழ 70கி.மீ தொலைவிலும், திருச்செந்தூரில் இருந்து ஏறத்தாழ 20கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய கடற்கரைதான் மணப்பாடு கடற்கரை.

சிறப்புகள் :

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள மணப்பாடு, கடலோர கிராமம் ஆகும். இயற்கை அழகு கொஞ்சும் மணப்பாட்டை ஏழைகளின் கோவா என்றும் அழைக்கின்றனர்.

இந்த மணல் மேட்டில் ஒரு புறம் மட்டுமே போக்குவரத்து வழி உள்ளது. மூன்று புறமும் கடலால் சூழப்பட்டுள்ளது. இந்த மணல் மேட்டில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலங்கரை விளக்கும், கண்காணிப்பு கேமராவும் உள்ளது.
மணப்பாடு ஆலயத்திற்கு பின்புறம் புனித சவேரியார் வாழ்ந்த குகை, கிணறு, தியான மண்டபம் மேலும் ஊருக்குள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகியவை அமைந்திருப்பது இந்த ஊருக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஆகும்.

வங்காள விரிகுடாவுக்குள் நீளும் ஒரு சிறிய தீபகற்ப பகுதி பாறையும் மணலுமான ஒரு சிறு குன்றாகும். இந்தக் குன்றின் வடக்கு பகுதி மணல் செறிந்த கடற்கரையாகவும், தென்பகுதி பாறைகள் மிகுந்த கடற்கரையாகவும் உள்ளது.

கோடை விடுமுறை நாட்களில் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து மணப்பாடு கடற்கரையை ரசித்து செல்கின்றனர்.

கோவா கடற்கரை போல ஜில் என்ற குளிர் காற்று குளியலுக்கு ஏற்ற கடற்கரை என்பதால் மணப்பாட்டிற்கு சுற்றுலா பயணிகள் திரண்டு வந்து ஆனந்த குளியல் போடுகின்றனர்.

ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்தும் குலசேகரன்பட்டினம் வழியாக கன்னியாகுமரி செல்லும் அனைத்து சுற்றுலா பயணிகளும் மணப்பாடு கடற்கரைக்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

இக்கடல் எவ்வளவு அழகுடனும், ரம்மியத்துடனும் காட்சியளிக்கிறது. இந்தக் கடலைப் பார்த்தாலே கடற்கரையில் நின்றுகொண்டு கால் நனைக்கவும், குளிக்கவும் தோன்றும்.

ஆனால், இக்கடல் ஆழமானது மட்டுமல்லாமல் சுழல் அலைகள் அவ்வப்போது எழுந்து ஆர்ப்பரிக்கக்கூடியது. கடற்கரைக்கு அருகிலேயே ஒரு தேவாலயம் உள்ளது.

எப்படி செல்வது?

தூத்துக்குடியில் இருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

எப்போது செல்வது?

அனைத்து காலங்களிலும் செல்லலாம்.

எங்கு தங்குவது?

தூத்துக்குடியில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக