ஆந்திராவில் கடந்த 30-ம் தேதி பிரகாசம்
மாவட்டம் லிங்ககுண்டா கிராமத்தில் சாலையோரம் இளம்பெண் மற்றும் கைக்குழந்தையின்
சடலம் எரிந்த நிலையில் கிடந்தன.
இது குறித்து விசாரணை நடத்திய
போலீசார், சம்பவத்திற்கு முன்பாக அவ்வழியாகப் பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற
தாமவாரிபள்ளியை சேர்ந்த கோட்டி என்பவனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது ஸ்ரீ லட்சுமி என்ற பெண்ணை
காதல் திருமணம் செய்துக் கொண்ட கோட்டிக்கு 9 மாத பெண் குழந்தை இருந்தது. மனைவியின்
நடத்தை மீது சந்தேகப்பட்டு தகராறு செய்து வந்த கோட்டி, சம்பவத்தன்று மனைவியையும்
குழந்தையும் கொன்று பின்னர் பெட்ரோல் ஊற்றி எரித்ததாக வாக்குமூலம் அளித்ததை
அடுத்து ஆந்திர போலீசார் கைது செய்யப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதி முழுக்க
மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக