Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 21 டிசம்பர், 2019

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த பெண் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலே உயிரிழப்பு.!

பைக்கில் இருந்து தடுமாறி விழுந்த பெண் மீது பேருந்து ஏறி சம்பவ இடத்திலே உயிரிழப்பு.!


சென்னையில் எழிலரசி என்பவர் அவரது கணவருடன் ஆயிரம் விளக்கில் இருந்து இருசக்கர வாகனத்தில் தேனாம்பேட்டையை நோக்கி சென்றார். பின்னர் அண்ணா மேம்பாலம் அருகே சென்ற போது திடீரென இருசக்கர வாகனம் நிலை தடுமாறியதால் இருவரும் சாலையில் விழுந்தனர்.
அப்போது அவர்களின் வாகனத்தின் பின்னால் வந்த மாநகரப்பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எழிலரசி மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். இந்த சம்பவத்தினால் அண்ணா மேம்பாலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி, போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
பின்னர் அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், பேருந்து ஓட்டுநரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், வயதானவர்கள் இருசக்கர வாகனத்தில் செல்வதை தவிர்த்து, வாடகை காரிலோ, ஆட்டோவிலோ சென்றால் விபத்தை தவிர்க்கலாமென போலீசார் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக