குடியுரிமை
திருத்தச் சட்டம் தொடர்பாக யோசனைகளை கூற விரும்புவோர் தெரிவிக்கலாம் என மத்திய
உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், சட்ட விதிகளை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடுகையில்., சட்டத்தை அமல்படுத்துவது மத்திய அரசின் கீழ் உள்ளது. சட்டத்தை செயல்படுத்துவதில் யார் ஈடுபடுவார்கள் என்பதை நாங்கள் இறுதி செய்வோம். இது டிஜிட்டல் மற்றும் எளிதான செயல்முறையாக இருக்கும், இதனால் மக்கள் எந்த பிரச்சனையும் எதிர்கொள்ள மாட்டார்கள்.
நாங்கள் அனைவரையும் கலந்தாலோசித்த பின்னர் மசோதாவைக் கொண்டு வந்தோம், [ட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னதாக ஆரோக்கியமான விவாதங்கள் இருந்தன. அதேவேளையில் பொதுமக்கள் நீதிமன்றத்திற்குச் செல்ல உரிமை உண்டு, எதிர்ப்பு தெரிவிக்கவும் உரிமை உண்டு. அதேப்போல் சட்டம் குறித்து பரிந்துரைகளை வழங்க விரும்புவோர் கொடுக்கலாம், நாங்கள் விதியை உருவாக்கும் பணியில் இருக்கிறோம். மக்களின் பரிந்துரைகளும் பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.
MHA sources on people protesting on roads against CAA: We brought the Bill after we consulted all, there were discussions. But they have the right to go to court & people have right to protest too. Those who want to give suggestions can give, we're in process of framing the rule. https://t.co/6BNAm7CW6q
— ANI (@ANI) December 20, 2019
நாடுமுழுவதும், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் கட்டுப்பாட்டை மிறியுள்ள நிலையில் மத்திய அரசு இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு நாடு முழுவதும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டம் மற்றும் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேட்டு (NRC) தொடர்பாக நாட்டின் பல இடங்களில் போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன.
இருப்பினும், தற்போது தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) போன்ற முறையான எந்த முயற்சியும் தொடங்கப்படவில்லை, அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றும் அரசாங்கத்தால் கூறப்படுகிறது. எனினும் வரும் காலத்தில் நிச்சையம் அனைத்து மாநிலங்களிலும் இந்த பதிவேடு செயல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
தேசிய அளவில் உத்தேச தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) செயல்படுத்தும் பட்சத்தில் 1971-க்கு முன்னர் அடையாள ஆவணங்களை நாம் முன்வைத்து நமது இந்திய குடியுரிமையினை நிரூபிக்க வேண்டும்.
அதேப்போல் குடியுரிமை திருத்த சட்டமானது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து மதத் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிச் சென்று இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பார்சிகள், பௌத்தர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க முற்படுகிறது. குடியுரிமை திருத்த சட்டம்(CAA) மீது டிசம்பர் 15 அன்று டெல்லியில் எதிர்ப்புக்கள் அதிகரித் துவங்கின என்பது குறிப்பிடத்தக்கது.
வன்முறை ஆர்ப்பாட்டங்கள் காணப்பட்ட நிலையில், தேசிய தலைநகரில் போக்குவரத்து மற்றும் மெட்ரோ நிலையங்கள் மீதான கட்டுப்பாடுகள் கடந்த சில நாட்களாக தொடர்கின்றன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக