கொடைக்கானல் ஏரி கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து
3 கி.மீ. தொலைவிலும், பழநியிலிருந்து 68கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய சுற்றுலாத்
தலமாகும்.
சிறப்புகள்
:
செயற்கை
ஏரியான கொடைக்கானல் ஏரி ஒரு விண்மீனின் வடிவத்தில் உருவாக்கப்பட்டிருக்கும்.
இந்த ஏரி
மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
கொடைக்கானல்
பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. தொலைவில் 60 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது
இந்த ஏரி.
ஏரியை
ஒட்டியே சில படகு துறைகளும் காணப்படுகின்றன. அவை படகு சவாரி செய்ய துடுப்பு படகுகள்
மற்றும் மிதிக்கட்டை படுகுகளும் வாடகைக்கு விடுகின்றன.
இது போக
குதிரை சவாரி மற்றும் மிதிவண்டி பயணம் செய்ய குதிரை மற்றும் மிதிவண்டிகள் வாடகைக்கு
கிடைக்கும்.
ஏரியின்
கரையை சுற்றி 5 கி.மீ. தூரத்திற்கு நடைபாதை அமைக்கப்பட்டிருப்பதால் இங்கு நடை பயணமும்
மேற்கொள்ளலாம்.
இது உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளிடம்
மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.
ஊருக்குள்
ஓய்வெடுக்க இந்த ஏரி ஒரு சிறந்த இடம்.
பார்க்க வேண்டிய இடங்கள் :
குதிரை
சவாரி
மிதிவண்டி
பயணம்
படகு சவாரி
மிதிக்கட்டை
படுகுகள்
எப்படி
செல்வது?
திண்டுக்கல்,
மதுரை, தேனி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய இடங்களில் இருந்து கொடைக்கானலுக்கு அதிக அளவில்
பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
எப்போது
செல்வது?
அனைத்து
காலங்களிலும் செல்லலாம்.
இதர சுற்றுலாத்
தலங்கள் :
குணா குகைகள்
தொப்பித்
தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான்
சோலை
டால்பின்
மூக்கு பாறை
செண்பகனூர்
அருங்காட்சியகம்
பேரிஜம்
ஏரி
அமைதி
பள்ளத்தாக்கு
செட்டியார்
பூங்கா
படகுத்
துறை
தற்கொலை முனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக