பங்குனி மாதம் தமிழ் மாதங்கள் பனிரெண்டில் கடைசி மாதமாகும். பங்குனி மாதம் என்பது சூரியன் மீன ராசியில் பிரவேசிக்கும் காலமாகும்.
இந்த பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று முருகப்பெருமானுக்குரிய பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும். அதேபோல் இந்த பங்குனி மாதத்தில் தான் அன்னை காமாக்ஷி ஊசி முனையில் தவம் இருந்து ஏகாம்பரேஸ்வரரோடு ஐக்கியமானார்.
இத்தகைய சிறப்பு பெற்ற பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் தன்னுடைய பேச்சால் கவரக்கூடிய ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். இவர்கள் மனதில் உள்ளதை எளிதில் வெளிக்காட்ட மாட்டார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எந்த ஒரு சூழ்நிலையிலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள். இவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று நினைப்பார்கள். கற்பனை வளம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
பங்குனி மாதத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு வாக்கு கொடுத்து விட்டால் அதை நிறைவேற்றியே தீருவார்கள். இவர்களுக்கு எதிர்pகளை திட்டமிட்டு வெல்லும் ஆற்றல் கொண்டிருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு அடிக்கடி பயணங்கள் செல்வதில் அதிக விருப்பம் இருக்கும். திட்டமிட்டு செயல்படக்கூடியவர்கள். முன்கோபம் அதிகமாக வரும். இயற்கைக் காட்சிகளை ரசிப்பார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எல்லோரையும் வசப்படுத்தக்கூடிய அளவிற்கு ஆற்றல் நிறைந்தவர்களாக இருப்பார்கள். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று சொல்வார்கள். ஆனால், இவர்களின் முகபாவங்களை வைத்து எதையும் தெரிந்து கொள்ள முடியாது.
உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளமாட்டார்கள். அதே நேரத்தில் சீக்கிரமாக மனத் தளர்ச்சி அடைந்து விடுவார்கள். பேச்சில் கனிவும், கண்டிப்பும் இருக்கும். இடம், பொருள், ஏவல் அறிந்து பணி புரிவதில் வல்லவர்கள். எப்பொழுதும் பல்வேறு விதமான எண்ணங்களில் மூழ்கி இருப்பார்கள்.
குடும்பத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வார்கள். வாக்கு கொடுத்து விட்டால் அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றுவார்கள். எப்போதும் கணக்கு வழக்குகளில் கவனம் செலுத்துவதால் இவர்களிடம் சேமிப்பு இருந்து கொண்டே இருக்கும்.
தீர்க்கமாகவும், தெளிவாகவும் முடிவு எடுப்பார்கள். பதுங்கிப் பாய்வதை இவர்களிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். சோதனை காலங்களில் வேதனை அடையமாட்டார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் எடுத்த காரியத்தை முடிக்காமல் பின்வாங்கமாட்டார்கள்.
செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய கிரகங்கள் நல்ல யோக அமைப்பில் இருக்கும் பட்சத்தில் கைராசி நிரம்ப பெற்றவர்களாக இருப்பார்கள்.
பங்குனி மாதத்தில் பிறந்தவர்களின் கையில் எப்பொழுதும் பணப்புழக்கம் இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எந்த ஒரு விஷயத்தில் முன் எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்களை மற்றவர்கள் பாராட்டி பேசினால் அதில் மயங்கி விடுவார்கள். இவர்களுக்கு சினிமா துறையில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புபவர்களாக இருப்பார்கள். இவர்களின் இளமை வாழ்க்கை வறுமை நிறைந்ததாக இருக்கும். இவர்கள் 40 வயதிற்கு மேல் சிறப்பான வாழ்க்கை வாழ்வார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக