
உலகில் அனைவருக்குமே நீண்ட நாள் வாழ வேண்டும் மற்றும் நாம்
இறந்த பின்பும் நம் புகழ் நிலைத்திருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
பொதுவாக ஒருவர் இறந்த பின்பு அவரது
உடல் அழுகி மட்கிவிடும். ஆனால் உலகில் இறந்த பின்பும் உடல் அழுகாமல் இன்னும் சில
சடலங்கள் அப்படியே உள்ளது என்றால் பாருங்கள்.
இவற்றில் சில சடலங்கள் மக்களின்
பார்வைக்காக பதப்படுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில சடலங்கள் இயற்கையாகவே
பதப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கு அந்த சடலங்கள் பற்றிய சுவாரஸ்ய
கதைகள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
ரேமெஸ்ஸெஸ்
II
இவர் எகிப்தியர்களின் 20 ஆம்
வம்சத்தின் போது பாரோவாக இருந்தவர். இவரது உடலைத் தோண்டி வெளியே எடுத்து, CT
ஸ்கேன் செய்து பார்த்ததில், தொண்டையில் முதுகெலும்பைத் தாக்கும் அளவில் ஆழமான
வெட்டுக் காயம் ஏற்பட்டு இறந்திருப்பது தெரிய வந்துள்ளது.

ஜியோஹே
2003 இல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சீனாவில் உள்ள மயானத்தை தோண்டிக் கொண்டிருக்கும் போது இந்த அழகிய மம்மி கிடைத்தது. இந்த சடலத்தின் கூந்தல், சருமம் மற்றும் கண் இமைகள் அப்படியே அழுகாமல் இருந்தது. மேலும் இந்த சடலமானது கம்பளி தொப்பி அணிந்து இருந்தது.
ஜான் டொரிங்டன்
இவர் ஒரு சிறு அதிகாரி. 22 வயதில் ஓர் ஆய்வுப் பயணத்தின் போது லெட் நச்சுப் பொருளால் மரணமடைந்தார். இவருடன் வேறு மூன்று அதிகாரிகளும் மரணமடைந்தனர். எனவே இவர்களை உறைந்த பனிப்பிரதேசத்தில் அடக்கம் செய்தனர். ஒருநாள் இவர்களது உடலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தோண்டி எடுக்கையில் இவரது உடல் மட்டும் அழுகாமல் அப்படியே அவர்களை கூர்ந்து பார்க்குமாறு இருந்ததாம்.
லேடி ஸின் ஜூஹி
சீனாவில் உள்ள ஒரு கல்லறையில் இருந்து தோண்டி எடுத்த போது, இந்த பெண்மணி இறந்து சுமார் 2000 ஆண்டுகள் இருக்கும் என்பது தெரிய வந்தது. இந்த பெண்மணியின் உடலில் உள்ள திசுக்கள் மிகவும் மென்மையாகவும், மூட்டுகள் வளையக்கூடியதாகவும் இருந்தது. மேலும் இந்த மம்மியின் முடி அப்படியே இருந்தது மற்றும் நரம்புகளில் ஏ வகை இரத்தப்பிரிவு இருந்தது தெரிய வந்தது. என்ன ஒரு ஆச்சரியம்!
லா டான்செல்லா
இந்த மம்மி இறந்து சுமார் 5000 வருடங்கள் இருக்கும் என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், லா டான்செல்லா என்னும் இந்த மம்மி 15 வயதில் ஆழ்ந்த தூக்கத்தைத் தூண்டும் ஒருசில போதைப் பொருள் கொடுத்து, சூரியனுக்கு பிரசாதமாக புதைக்கப்பட்டார். அதிலும் இந்த மம்மி இன்கா மக்களின் உடையணிவித்து புதைக்கப்பட்டிருந்தது.
டார்சோ இடிகிலோவ்
இவர் பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர். இவர் தியான நிலையில் அமர்ந்து மந்திரம் ஜெபித்துக் கொண்டிருக்கும் போதே இறந்துவிட்டார். இவர் இறப்பதற்கு முன், தன் சிஷ்யர்களிடம் தான் இறந்த பின் தன்னை புதைத்துவிட்டு, சில வருடங்கள் கழித்து தோண்டி எடுக்குமாறு கூறினாராம். அப்படியே செய்ததில், அவர் சற்றும் அழுகாமல் அப்படியே இருந்தார்.
டோலண்ட் மனிதன்
இந்த மம்மி இறந்து சுமார் 2000 வருடங்கள் இருக்கும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களுக்கு எதிர்பாராதவிதமாக கிடைத்த இந்த சடலம் சமீபத்தில் தான் இறந்திருக்கக்கூடும் என்று நினைத்தனர். ஏனெனில் அந்த அளவில் சடலமானது இருந்தது. ஆனால் ஆய்வு செய்ததில் இவர் 2000 வருடங்களுக்கு முன் தூக்கு மாட்டி இறந்ததாக தெரிய வந்துள்ளது.
ஜிதா (Zita)
ஜிதா ஒரு நல்ல மனம் மற்றும் கருணை உள்ளம் கொண்ட ஒரு ஞானி. இவர் உயிருடன் இருக்கையில், இவரைச் சுற்றி ஒரு மதப் பிரிவினர் இருந்தனர். இவர் 1272 இல் இறந்தார். 300 வருடங்கள் கழித்து அவரது உடலை தோண்டிப் பார்க்கையில் அவரது உடல் அழுகாமல் அப்படியே இருந்தது தெரிய வந்து, தற்போது இத்தாலியில் இவரது உடல் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.![]() | ![]() | ![]() | ||
![]() | ![]() | ![]() | ||
![]() | ![]() | |||
![]() |
| ![]() |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக