Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 31 ஜனவரி, 2020

தெலுங்கானாவில் அதிரடி தீர்ப்பு.! வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை .!





தெலுங்கானாவில் அதிரடி தீர்ப்பு.! வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை .! 



தெலுங்கானா மாநிலம் கொம்பரம் மாவட்டத்தில் உள்ள லிங்காபுரம் வனப்பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 24-ம் தேதி 30 வயது மதிப்புத்தக்க பெண் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இறந்த பெண் அப்பகுதியில் பாத்திரங்கள் விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.  போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சேக் மக்தூம் (35), ஷேக் பாபு (30), சேக் ஷாபுதீன் (40) ஆகிய மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்ட சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நிதிபதி பிரியதர்ஷினி குற்றவாளிகள் மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்பதாக இறந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினர். தீர்ப்பு குறித்து மேல் முறையீடு செய்ய குற்றவாளிகளுக்கு 30 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக