மதுரையிலிருந்து ஏறத்தாழ 3கி.மீ தொலைவிலும், கோரிப்பாளையத்திலிருந்து ஏறத்தாழ 1கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள அழகிய பூங்காதான் ராஜாஜி பூங்கா ஆகும்.
சிறப்புகள் :
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பங்களுடன் பொழுதுபோக்கை களிக்கும் இடமாக ராஜாஜி பூங்கா திகழ்கிறது.
இங்கு குழந்தைகள் அங்கும்... இங்கும்... ஆடிப்பாடி விளையாடுவதற்கு ஊஞ்சல்கள், சறுக்குகள், பெரிய ராட்டினங்கள் என்று உற்சாகம் மூட்டும் விளையாட்டுகள் பல அமைந்துள்ளன.
மேலும் சிறு குழந்தைகள் விளையாடுவதற்கு வாத்து, தவளை, டிராகன், மூன் ரோலர் போன்ற சிறு வகை ராட்டினங்களும் இந்த பூங்காவில் அமைந்துள்ளன.
இந்த பூங்காவில் பரவசமூட்டும் விளையாட்டுகளான குடும்பத்துடன் பயணிக்கும் ரயிலும், சிறுவர்கள் என்று ஸ்நேக் ரயில் ஆகியவையும் உள்ளன.
ராஜாஜி பூங்காவை அழகுச் சேர்க்கும் விதத்தில் மீன் அருட்காட்சியகம் ஒன்று பூங்காவின் உட்புறத்தில் அமைந்துள்ளது. அதில் நம் கண்களை கவரும் வகையில் அழகிய வண்ணமயமான மீன்களும், அவை பார்ப்பதற்கு வித்தியாசமான விதத்தில் அமைந்திருக்கும்.
நம் கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் புறாக்கள், லவ் பேர்ட்ஸ், கோழிகள், வாத்துகள், முயல் போன்றவைகளையும் கண்டு ரசிக்கலாம்.
எப்படிச் செல்வது?
மதுரையிலிருந்து பேருந்துகள் மூலம் செல்லலாம்.
எப்போது செல்வது?
அனைத்துக் காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
மதுரையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
இதர சுற்றுலாத் தலங்கள் :
மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.
காந்தி மியூசியம்.
அழகர் கோவில்.
வைகை அணை.
திருப்பரங்குன்றம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக