Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 10 ஜனவரி, 2020

மாற்றி சிந்தியுங்கள்..!

 Image result for மாற்றி yosi"
ண் பார்வை இல்லாத சிறுவன் ஒருவன் வீதியில் இருக்கும் ஒரு மாடிப் படிக்கட்டில் அமர்ந்துக் கொண்டு பிச்சை எடுக்கிறான். அவன் அருகே நான் குருடன், உதவுங்கள்! என்ற வாசகம் எழுதப்பட்ட பலகை ஒன்றும் காசு போடுவதற்கான பாத்திரம் ஒன்றும் இருந்தது.

அவ்வழியே செல்லும் யாரும் அவனுக்கு பெரிதாக உதவியதாக தெரியவில்லை. பாத்திரத்தில் சில்லறைகள் விழுந்தபாடும் இல்லை. அந்த வழியில் வந்த ஆண் ஒருவர், சிறுவனுக்கு உதவி செய்தார். பாக்கெட்டில் இருந்து சில்லரைகள் எடுத்து பாத்திரத்தில் போட்டார்.

பின்பு, அருகில் இருந்த பலகையைப் பார்த்தார். இரண்டு நிமிடங்கள் சிந்தித்து விட்டு, பலகையை எடுத்து அதில் இருந்த வாசகத்தை மாற்றிவிட்டு சென்றார். அவர் சென்ற சிறிது நேரத்திலேயே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பத் தொடங்கியது. சில்லரை விழும் சத்தத்தை கேட்டவுடன் அந்த சிறுவனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை.

வாசகத்தை மாற்றி அமைத்தவர், ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? என்று பார்க்க மீண்டும் அந்த இடத்திற்கு வந்தார். அவர் எதிர் பார்த்தது போலவே பாத்திரம் சில்லரைகளால் நிரம்பி இருந்தது. சிறுவன் அவரின் கால் தடத்தால் வந்த ஓசையை வைத்து அவரைக் கண்டு கொண்டான். நீங்கள் தானே முன்பு வந்து இந்த பலகையை எடுத்து மாற்றினீர்கள். என்ன எழுதினீர்கள். எப்படி இப்போது நிறைய பேர் உதவி செய்கிறார்கள் என்றான்.

அந்த இரண்டாம் வாசகம் தான் என்ன? எதனால் இம்முறை நிறையப் பேர் எனக்கு உதவினார்கள் என்று கேட்டான். அதற்கு அவர் இரண்டாம் வாசகத்தில், இன்று மிகவும் அழகான நாள், அதை என்னால் பார்க்க முடியல்லை! என்று எழுதினேன் என்றார்.

இரண்டு வாசகங்களுமே சிறுவன் கண்பார்வையற்றவன் என்பதைத் தான் குறிப்பிடுகின்றன. ஆனால், முதல் வாசகம் சிறுவன் பார்வை இல்லாதவன் என்று மட்டுமே சொல்கிறது. இரண்டாம் வாசகம் நம் அனைவருக்கும் பார்வை இருப்பதை நினைவுபடுத்துகிறது. அந்த சிறுவனிடம் இல்லாத ஒன்று நம்மிடம் இருப்பதை கண்டதும் மகிழ்ச்சியில் நிறைய உள்ளங்கள் அவனுக்கு உதவியது.

நீதி :
உங்களுக்கு எது தேவை என்று கடவுளால் கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதற்கு முதலில் நன்றி சொல்லுங்கள். வாழ்க்கை உங்களுக்கு அழுவதற்கு 100 காரணங்கள் கொடுத்தால், என்னிடம் சிரிப்பதற்கு 1000 காரணங்கள் இருக்கிறது என்று காட்டுங்கள்.

எதை சொன்னாலும் மற்றவர் மனம் மகிழும் படி சொல்லுங்கள். எதையும் நேர்மறையாய் எதிர் கொள்ளுங்கள். மாற்றிச் சிந்தியுங்கள். உங்கள் வாழ்க்கை அழகாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக