ஒடிசா மாநிலத்தில் சுபோபன் ராணா
என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.இவரது தங்கை ஜனனி
ஆவார்.இந்நிலையில் இரண்டு நாட்களாக மகள் ஜனனியை காணாததால் அவரின் பெற்றோர்
காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில்
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினருக்கு காணாமல் போன
பெண்ணின் அண்ணன் ராணா சிறுவனை பலிகொடுத்ததற்கு சிறைசென்று ஜாமீனில் வந்தது
தெரியவந்தது.
இந்நிலையில்
அவர் மீது சந்தேகம் அடைந்த காவல்துறையினர் ராணாவை அழைத்து விசாரணை
செய்துள்ளனர்.பின்னர் விசாரணையில் ராணா தாம்தான் கொலை செய்ததாக
ஒப்புக்கொண்டுள்ளார்.
அவர்
தனது ஆசைகளை நிறைவேற செய்வதற்கு கடவுளை சந்தோஷப்படுத்த சொந்த தங்கையையே நரபலி
கொடுத்ததாக கூறியுள்ளார்.தங்களின் மகளை கொலை செய்த ராணாவிற்கு தகுந்த தண்டனை
அளிக்குமாறு அவரின் பெற்றோர் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
இதன்
காரணமாக ராணாவை மீண்டும் கைது செய்த காவல்துறையினர் ஜனனியின் உடலை மீட்டு
பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக