சுவிட்சர்லாந்தில் உள்ள
டிரிம்பாக் பகுதியில் ரோமி மற்றும் பெஞ்சமின் என்ற வயதான தம்பதி வசித்து
வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் ஏதோ
சத்தம் கேட்டுள்ளது.
பின்னர்
வீட்டிற்குள் திருடன் நுழைந்திருப்பதை அறிந்த இருவரும் திறமையாக செயல்பட்டு
திருடனை கீழே தள்ளி அவனின் மீது ஏறி அமர்ந்துள்ளனர்.பின்னர் காவல்துறையினருக்கு
தகவல் அளித்துள்ளனர்.
காவல்துறையினர்
வரும் வரை அந்த திருடனின் முதுகில் இருவரும் அமர்ந்துள்ளனர்.பின்னர் தகவலின்
அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்ததுடன் அவனிடம்
இருந்த மடிக்கணினியையும் பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
பின்னர்
இந்த வயதான தம்பதியினரின் துணிச்சலை பாராட்டியதோடு தைரியமாக திருடனை பிடித்தமைக்கு
நன்றி தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக