>>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • >>
  • 27-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
  • >>
  • 25-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 28 ஜனவரி, 2020

    அருள்மிகு அழியா இலங்கையம்மன் திருக்கோவில்

    Image result for அருள்மிகு அழியா இலங்கையம்மன் திருக்கோவில்"


     இராசிபுரம், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். அழியா இலங்கை அம்மன் கோவில் என்கிற ஆயா கோவில் இராசிபுரம் வட்டம் கூனவேலம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது.

    மூலவர் : அருள்மிகு அழியா இலங்கையம்மன்.

    அம்மன்ஃதாயார் : அத்தனூர் அம்மன்.

    தல விருட்சம் : வேம்பு.

    தீர்த்தம் : காவிரி.

    ஆகமம்ஃபூஜை : அதர்வண வேதம்.

    பழமை : 1100 வருடங்களுக்கு முன்.

    புராண பெயர் : ராசிபுரநாடு.

    தல வரலாறு :

     சீதையைத் தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற இலங்கை அம்மன் தடுத்தாள். அனுமன் தன் வாலினால் இலங்கை அம்மனைக் கட்டி சுருட்டி வீசப்பட்ட அம்மன், கூனவேலம்பட்டி புதூரில் வந்து தலைகீழாக விழுந்ததால் இங்கு இந்த அம்மனின் பாதங்களை வழிபடுகின்றார்கள். இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். அம்மனுக்குரிய சிலை, சிவனும் பார்வதியும் இணைந்து அழகிய லிங்க வடிவில் அமைந்துள்ளது.

     ஆரம்பத்தில் புல்லும் புதருமாக கிடந்த இடத்தில் இருந்த புற்றில், மேய்ச்சலுக்கு வந்த ஒரு மாடு மட்டும் இங்கு வந்து பாலைச் கொடுத்து விட்டு சென்றாதாம். மாடு சரியாக பால் கரக்காததை சந்தேகப்பட்டு மாட்டுகாரர், மாட்டை பின் தொடர்ந்து சென்று பார்த்தபோது விஷயத்தை அறிந்து கொண்டார். அவர் கனவில் அம்மன் வந்து தன்னுடைய வரலாற்றை கூற, அந்த இடத்தில் பந்தல் போடப்பட்டு வழிவழியாக வளர்ந்து வந்து கொண்டுள்ளது.

    தல பெருமை :

     இலங்கை அதிபதி இராவணனின் சகோதரியான சூர்ப்பனகைக்கு உலகிலேயே அமைந்துள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே ஆகும். கர்பகிரகத்தில் அம்மன் தலை மட்டுமே இருக்கும் இராம இலட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் சித்தர் கோவில், கொங்கண சித்தர் கோவில் உள்ளிட்ட பழமையான கோவில்கள் உள்ளன.

     ஐந்து ஏக்கர் பரப்பளவில் அழியா இலங்கை அம்மன் கோவில் நாற்புரமும் மதில் சுவர் எழுப்பப்பட்டு, மூன்று வாயில்களுடன் அதி அற்புதமாகத் திகழ்கிறது. கருவறை புற்று வடிவில் அமைந்துள்ளதால், இப்புற்றில் தலைகீழாக வடக்கு நோக்கி நிற்கும்போது இரண்டு பாதங்களும் மேல்நோக்கி அமைந்துள்ளன. திருவிழா சமயங்களில் மட்டும் இப்பாதத்தின்மீது உருவச்சிலை ஒன்று வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது.

    பிரார்த்தனை :

     நோய்கள் குணமடைய இங்கு பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

    மக்கள் நேர்த்திக்கடனாக நாய் மற்றும் பாம்பு உருவத்தினை செலுத்துகின்றனர்.
    வீட்டில் உள்ள பசுக்கள் நலத்துடன் இருக்கவும், நோய்கள் நெருங்காமல் இருக்க சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து காணிக்கையாக சமர்பிக்கிறார்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக