Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 5 பிப்ரவரி, 2020

நிர்பயா வழக்கில் தீர்ப்பு: அனுமதிக்க முடியாது - நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!

நிர்பயா பாலியல் வழக்கில் குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியே தூக்கிலிடுவது பற்றி டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.


கடந்த 2012ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த மாணவி பின்னர் சிகிச்சை பலனின்றி சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் சிறுவன் என 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராம்சிங் என்பவர் டெல்லி திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இந்த வழக்கு விசாரணையில் குற்றவாளியான சிறுவனுக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் 3 ஆண்டுகள் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

 இதையடுத்து முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன.

இந்த சூழலில் குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராக கருணை மனுக்கள் தாக்கல் செய்து வந்தனர். இதனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் கால தாமதம் ஏற்பட்டு வருகிறது. கடைசியாக பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது.

இந்த சூழலில் 4 பேரையும் தூக்கிலிடக் கூடாது என்று டெல்லி செசன்ஸ் நீதிமன்றம் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்தும், தனித்தனியாக தூக்கிலிட அனுமதி அளிக்கக் கோரியும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் திகார் சிறை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரே வழக்கு, ஒரே தண்டனை என்பதால் தனித்தனியே தூக்கிலிட அனுமதி இல்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட குற்றவாளிகள் என்பதால் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது. 

2012 Delhi gang-rape case: Delhi High Court dismisses Centre's plea challenging trial court order which had stayed… https://t.co/m28g0zHbPd
— ANI (@ANI) 1580893996000

குற்றவாளிகள் 4 பேரும் ஒரு வாரத்திற்குள் அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சட்ட நிவாரணங்களை காரணம் காட்டி குற்றவாளிகள் தொடர்ந்து காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம் மத்திய அரசு, டெல்லி அரசு தாக்கல் செய்த மனுக்களை நீதிபதி சுரேஷ்குமார் கெய்ட் தள்ளுபடி செய்துள்ளார். எனவே இன்னும் ஒருவாரம் கழித்து நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை தேதி முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக