லட்சக்கணக்கானோர்
விண்ணப்பிக்கும் குரூப் 4, 2ஏ ஆகிய தேர்வுகளில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெற்றது
தற்போது வெளிவந்தது. இராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய இரு தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள்
முதல் 100 இடங்களில் தேர்வானது சந்தேகத்தை கிளப்பியது.
அதைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், ஊழியர்கள், இடைத் தரகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
தனது குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு முறைகேட்டில் ஈடுபட்டு அரசுப் பணியை பெற்றுத் தந்த காவலர் சித்தாண்டியை சிபிசிஐடி போலீஸார் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டார். சித்தாண்டியிடம் போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் “நான் வெறும் இடைத்தரகர்தான். என்னை விட சிலர் இந்த முறைகேட்டில் உள்ளனர்” என கூறி சிபிசிஐடி போலீஸாரை அதிர்ச்சிடைய வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக உள்ள முகப்பேர் ஜெயக்குமார் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
மேலும் சில இடைத் தரகர்களிடம் நடைபெற்ற விசாரணையில் டிஎன்பிஎஸ்சி மட்டுமல்லாமல் ஆசியர் தேர்வு வாரியத் தேர்விலும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பின்புலமாக ஜெயக்குமார் இருந்துள்ளதாகவும் இடைத்தரகர்கள் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டு பணிக்குச் சேர்ந்தவர்கள் யார் யார் என்பது குறித்த ஆவணங்களைத் திரட்டும் பணியில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களிலும் ஜெயக்குமாரை பிடிக்க தனிப்படை போலீஸார் முகாமிட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக