Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 பிப்ரவரி, 2020

பேடிஎம் பயனர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு குட் நியூஸ்.!


அடையாளம் காண முடியும்
பேடிஎம் செயலியை இந்தியாவில் அதிகளவு மக்கள் பயன்படுத்துகிறார்கள் என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக இந்த செயலி பல்வேறு புதிய அம்சங்கள் வந்துகொண்டேதான் இருக்கிறது.
ஏ.ஐ (Artificial Intelligence)
இந்நிலையில் பாதுகாப்பு கருதி பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் தளத்தில் ஏ.ஐ (Artificial Intelligence)
தொழில்நுட்பம் பயன்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதைப் பற்றிய முழுவிவரங்களையும் பார்ப்போம்.
அதாவது பணப்பரிமாற்றத்தின்போது மோசடி செய்பவர்களிடமிருந்து பயனர்களைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் பரிவர்த்தனை விபர்ங்களை பாதுகாக்கவும, பேடிஎம் பேங்க் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய அம்சங்களை அறிமுகப்படுகிறது. 

அடையாளம் காண முடியும்

எனவே பேடிஎம் தளத்தில் ஏ.ஐ எனப்படும் ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகிறது. இது
யாரேனும் உங்களது கணக்கு விபரங்களை ஹேக்கிங் செய்ய முயற்சித்தால் அது தெரிய வந்துவிடும். பின்பு சந்தேகத்திற்கு இடமான பணப்பரிவார்த்தனைகளை அடையாளம் காண முடியும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்

பாப்-அப் செய்தி

குறிப்பாக பேடிஎம் பயனர்கள் வேறு ஏதேனும் சாதனத்தில் கணக்கு உபயோகிக்கும்போது, அதற்கான எச்சரிக்கை பாப்-அப் செய்தியை இந்த புதிய பாதுகாப்பு அம்சம் வழங்கும் எனக் கூறப்படுகிறது.

பிரத்யேக குழு

பின்பு இணையப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 200-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வல்லுநர்கள் மற்றும் தொழில்துறை முக்கியஸ்தர்களைக் கொண்ட ஒரு பிரத்யேக குழுவை இந்நிறுவனம் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3500 தொலைபேசி எண்

குறிப்பாக இந்த குழுக்கள் அனைத்தும் மாநில, மத்திய பேரீஸ் படைகள், சைபர் செல்கள், தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் நெருக்கமாக செயல்பட்டு, மோசடி பரிவர்த்தனைகளை கண்டறிந்து தடுக்கவும், புகாரளிக்கவும் உதவும், அதுமட்டுமின்றி எஸ்எம்எஸ் மற்றும் போன் அழைப்பு மோசடிகளில் ஈடுபட்ட 3500 தொலைபேசி எண்களின் விரிவான பட்டியலை வங்கி அதிகாரிகளுக்கு சமர்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக