லாவா நிறுவனம் குறைந்த விலையில் புதிய லாவா
இசெட்53 என்ற ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் பட்ஜெட் விலையில்
வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.
லாவா
இசெட்53
லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது
6.1-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்
19:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது,
எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
8எம்பி
ரியர் கேமரா
லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் ஆனது 8எம்பி
ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக
வீடியோ கால் வசதிக்கு ஏற்றபடி இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும்
எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.
கைரேகை
சென்சார்
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி எல்டிஇ,
வைஃபை, ப்ளூடூத் ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள்
அடக்கம். குறைவான விலையில் இந்த ஸ்மார்ட்போன் வந்தபோதிலும் கைரேகை சென்சார் போன்ற
வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படவில்லை.
0.4செகன்ட்
பேஸ்அன்லாக்
ஆனால் இந்த ஸ்மார்ட்போல் 0.4செகன்ட்
பேஸ்அன்லாக் வசதி வழங்கப்பட்டுள்ளது, எனவே பாதுகாப்பாக இந்த ஸ்மார்ட்போனை
பயன்படுத்த முடியும். மேலும் ரியல்மி சி2, ரெட்மி 8ஏ போன்ற ஸ்மார்ட்போன்
வரிசைகளில் இந்த லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
4120எம்ஏஎச்
பேட்டரி
லாவா இசெட்53 ஸ்மார்ட்போன் மாடலில்
4120எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே வீடியோ பிளேபேக் வசதிக்கு அருமையாக
இருக்கும், குறிப்பாக அதிக நேரம் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்தலாம் சார்ஜ் பற்றிய
கவலை இருக்காது.
ரிலையன்ஸ்
ஜியோ
லாவா இசெட்53 ஸ்மார்ட்போனின் விலை
மதிப்பு ரூ.4,829-ஆகும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரிலையன்ஸ் ஜியோ
நிறுவனம் சார்பில் சிறப்பு தள்ளுபடியும், பின்பு டேட்டா சலுகையும் வழங்கப்படுகிறது
என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக