Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 பிப்ரவரி, 2020

MWC 2020: வெறும் ரூ.6,200 முதல்; நோக்கியா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி! எப்போது? என்ன போன்?

ரவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2020 (எம்.டபிள்யூ.சி) நிகழ்வில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தப்போவதாக, நோக்கியா பிராண்டட் போன்களை தயாரிக்கும் எச்.எம்.டி குளோபல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சந்திப்பில் நோக்கியா தனது அடுத்த தலைமுறை நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சந்திப்பானது வருகிற பிப்ரவரி 23 அன்று நடக்கவுள்ளது. இந்த சந்திப்பில், எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது எம்மாதிரியான நோக்கியா-பிராண்டட் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும்? எங்களிடம் சில வியூகங்கள் உள்ளன.

இந்த அறிமுக நிகழ்வின் போது க்ளோபல் எச்எம்டி நிறுவனம், நோக்கியா 8.2 5ஜி, நோக்கியா 5.2, நோக்கியா 1.3 மற்றும் ஒரிஜினல் சீரிஸ் பீச்சர் போன்களை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதற்கு முன்னதாகவே இந்த அனைத்து நோக்கியா ஸ்மார்ட்போன்களின் சில முக்கிய அம்சங்களும் லீக் ஆகியுள்ளன, நெருப்பில்லாமல் புகையுமா?

  முதலில் நோக்கியா 8.2 5ஜி - இது நிறுவனத்தின் முதல் 5 ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 5ஜி மொபைல் பிளாட்பார்ம் கொண்டு இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் அடிப்படை மெமரி வேரியண்ட் ஆனது 6 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜுடன் வரலாம், உடன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி / 256 ஜிபி வேரியண்ட்களும் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
 
கேமராத்துறையை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் பாப்-அப் செல்பி கேமரா இடம்பெறும் என்று கூறப்படுகிறது, இருப்பினும் அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் இது 32 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமராவுடன் வரவும் வாய்ப்புள்ளது. பின்பக்கத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா 7.2 ஸ்மார்ட்போனில் இடம்பெற்ற கேமரா அமைப்பை பெறலாம்.

மறுகையில் உள்ள நோக்கியா 5.2 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாட்டிற்கான விலை நிர்ணயம் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.13,300 என்கிற புள்ளியை எட்டலாம் என்று கூறப்படுகிறது.

 நோக்கியா 5.2 ஆனது 6.2 இன்ச் அளவிலான எல்சிடி டிஸ்ப்ளேவுடன் வரும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 632 ப்ராசஸர் மூலம் இயக்கப்படலாம்.

கடைசியாக நோக்கியா 1.3 ஆனது எச்எம்டி குளோபல் நிறுவனாயின் "நுழைவு நிலை" ஸ்மார்ட்போனாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.6,200 என்கிற விலைக் குறியுடன் வரும் என்று கூறப்படுகிறது. நோக்கியா 1.3 ஆனது 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரியுடன் வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக