Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 1 பிப்ரவரி, 2020

டிக்டாக்கில் 5.5 பில்லியன் நேரத்தை செலவழித்த இந்தியர்கள்..! பேஸ்புக் அதிர்ச்சி...

பொழுதுபோக்கு செயலியான டிக்டாக் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற பிரபல சமூக வலைத்தளங்களை காட்டிலும் அசுர வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.


2019 இல் டிக்டாக்கில் இந்தியர்கள் 5.5 பில்லியன் மணிநேரங்களுக்கு மேல் செலவிட்டதாக புதிய அறிக்கை கூறுகிறது. இது 2018 தரவை விட ஆறு மடங்கு அதிகரிப்பு ஆகும். இந்த அறிக்கையை ஆப் ஆனி (App Annie) என்ற செயலி பகுப்பாய்வு வெளியிட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களை உலக பயனர்கள் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் 2016 செப்டம்பர் மாதம் டிக்டாக் லான்ச் ஆனதையடுத்து மற்ற சமூக வலைத்தளங்களில் பயனர்களின் வருகை போக்கு குறைந்து விட்டதாக இந்த அறிக்கையில் தெளிவாகியுள்ளது.

2019 இன் டிசம்பர் மாதம் மட்டும் டிக்டாக் செயலின் மாதாந்திர பயனர்களின் எண்ணிக்கை 90 சதவீதம் உயர்ந்து 91 மில்லியன் மணி நேரங்கள் அதிகரித்துள்ளது. அதே மாதம் பேஸ்புக் அதன் பயனர் எண்ணிக்கையில் 15 சதவிகிதம் மட்டுமே உயர்ந்து 25.5 பில்லியன் நேரங்கள் பதிவாகியுள்ளது.

மேலும், சென்சார் டவர் தரவின்படி, 2019 இல் மட்டும் டிக்டாக் செயலியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் பயனர்கள் 323 மில்லியன் முறை பிளேஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்துள்ளனர். ஆனால் பேஸ்புக் செயலியை 156 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2006 இல் அறிமுகப்படுத்தப்பட்ட பேஸ்புக் மீது பயனர்களின் கவனமானது 18 மாதங்களுக்கு முன்பு அறிமுகமான டிக்டாக் செயலியால் சிதறியுள்ள நிகழ்வு பேஸ்புக் உள்ளிட்ட மற்ற பழைய சமூக வலைதளங்களுக்கும் பெரிய பின்னடைவு என்பதுதான் மறுக்கமுடியாத உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக