எந்த மூலிகையில் அற்புதமான சக்தி இருக்கிறதோ
அதை தெய்வத்திற்கு சமமான ஒன்று என முன்னோர்கள் கருதினார்கள். வேம்பை
அம்மனாகவும்,அரச மரத்தை சிவனாகவும்,துளசியை பெருமாளாகவும் போற்றினார்கள். அதே போல்
அற்புத சக்தி உள்ள மூலிகைதான் பவள மல்லி செடி. பல தெய்வங்கள் இதில் வாசம் செய்வதாக
சொல்லி வணங்குவார்கள். கொரொனா வைரஸ் அறிகுறிகளான சளி, காய்ச்சலைத் தடுக்கும்
ஆற்றல் பவளமல்லிக்கு உண்டு என்றும் கூறப்படுகிறது. அகத்திய சித்தர் அருளிய
சிகிச்சை முறையில் இதை கூறியுள்ளனர்.
காய்ச்சல்,சளி, இருமல் குணமாக
பவளமல்லி இலைகள் எடுத்து நீர்விட்டு நன்றாக அலசி இதனுடன் சிறிது இஞ்சி தட்டி போடவும்.
சிறிது பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி
தினமும் இருவேளை குடித்துவந்தால் சிக்குன் குனியா, டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குணமாகும்
. சளி, இருமல் கட்டுப்பாட்டுக்குள் வரும். ரத்த வட்ட அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.
தண்ணீரில் பவள மல்லி இலையின் சாறு
எடுத்து அதை கொதிக்க வைத்து 100 மி.லி. ஆக காய்ச்சி, அதனுடன் மிளகு மற்றும்
எலுமிச்சை சாறு கலந்து உணவுக்கு முன் மூன்று வேளை பருகி வர எந்த வித வைரஸ்
காய்ச்சலாக இருந்தாலும் ஓடியே போய் விடும் என்று சித்த மருத்துவர்கள்
கூறுகின்றனர்.
இந்த பவளமல்லி இலைகளில் ஐந்தை பறித்து
அதை துண்டு துண்டாக்கி இரண்டு குவளை நீரில் போட்டு ஒரு குவளை நீராகும் வரை காய்ச்சி
இரண்டு மிளகையும் போட்டு கசாயமாக தினம் மூன்று வேளை குடித்தால் எந்த உயிர் கொல்லி
வைரஸும் கிட்ட கூட நெருங்காதாம்.
கொரோனா
மரணங்கள்
சீனாவை கொரோனா சாத்தான் ஆட்டிப்படைத்து
வருகிறது. இந்தியாவிற்குள்ளும் ஒருவரை அனுப்பிவிட்டது. 2003ஆம் ஆண்டு சீனாவை
அச்சுறுத்தியது சார்ஸ் நோய். ஒரு வகை வைரஸால் பரவும் இந்த நோய் சுவாச மண்டலத்தைத்
தாக்கும் தன்மையுடையது. சீனாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் 37
நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. சார்ஸ் நோயால் மொத்தம் 8,098 பேர்
பாதிக்கப்பட்டனர், அவர்களில் 774 பேர் உயிரிழந்தனர். அதற்குப் பிறகு சுமார் 17
ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே வகையான வைரஸின் தாக்கம் சீனாவில்
ஊருடுவியுள்ளது. இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை
ஏற்படுத்தும் தன்மை கொண்டது.
அச்சத்தில்
மக்கள்
இதுவரை இந்த நோயால் 10 ஆயிரத்துக்கும்
மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவைத் தவிர அமெரிக்கா, தாய்லாந்து, ஜப்பான்
போன்ற பத்துக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 91 பேர் இந்த நோயால்
பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, சீனாவில் மட்டும் 213 பேர்
உயிரிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அமெரிக்கர்கள் யாரும் சீனாவுக்குப்
பயணப்படாதீர்கள் என அமெரிக்க அரசு உத்தரவே பிறப்பித்துவிட்டது. கூடவே, சீனர்களும்
இங்கு வர வேண்டாம் என்கிற ரீதியிலான கோரிக்கையையும் வைத்துள்ளது.
பொருளாதார
நெருக்கடி
அமெரிக்கா. இஸ்ரேல், இத்தாலி போன்ற
நாடுகளில் சீனாவுக்கும் அவர்களுக்குமான போக்குவரத்து விமானங்கள் யாவும்
முடக்கப்பட்டுவிட்டன. வடகொரியாவில், ரயில் போக்குவரத்துகூட நிறுத்தப்பட்டுவிட்டது.
சீனாவின் எல்லைப்பகுதியை ரஷ்யா மூடிவிட்டது. சீனாவிற்கு மிகப்பெரிய பொருளாதார
நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கொரொனா வைரஸ் என்றால் அச்சப்பட வேண்டாம்.
பாதுகாப்பு
நடவடிக்கை
இந்த வைரஸின் செல்கள் அளவில் பெரியவை
என்பதால் 400 - 500 நானோ மீட்டர். ஒரு நானோ மீட்டர் என்பது நூறு கோடியில் ஒரு
பகுதி சாதாரண மாஸ்க் இந்த வைரஸை வட்டிகட்டிவிடும். யாராவது தும்மும்போது இந்த
வைரஸ் பத்தடி துரம் பரவும்தன்மை கொண்டது. இந்த வைரஸ் நம் கைகளில் பட்டால் 5 முதல்
10 நிமிடங்கள்வரை உயிருடனிருக்கும். அதனால்தான் அடிக்கடி கைகளைக் கழுவச்
சொல்கிறார்கள். ஆடைகளின் மீது 6 முதல் 12 மணி நேரம் உயிர் வாழும். சாதாரண
டிட்டெர்ஜென்ட் சோப்புகளால் துவைத்தாலே இவை இறந்து விடும். கம்பிளி ஆடைகளை
வெயிலில் உலர்த்தினால் போதும். உயிரிழந்துவிடும். உலோகத் தளங்களின் மீது 12 மணி
நேரம் உயிருடனிருக்கும். ஸ்டீல் மேஜை, நாற்காலி இவற்றைத் தொட்டால் உடனே கை
கழுவிவிடுதல் நன்று.
கொரோனா
அறிகுறிகள்
வறண்ட தொண்டை, மூன்று முதல் 4
நாட்களுக்கு இது தொடரும். மூக்கில் நீர் ஒழுகுதல், நெஞ்சில் சளி, என ஐந்து முதல் 6
நாட்களுக்குத் தொடரும். பாதிப்பு அதிகமாயிருந்தால் நிமோனியா காய்ச்சல் ஏற்படும்.
மூச்சுவிட சிரமமாக இருக்கும். தண்ணீருக்குள் மூழ்கும்போது உணர்வதைப் போன்ற
மூச்சுத் திணறல் ஏற்படும். எனவே ஒரு வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள்
இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். ஆங்கில மருத்துவத்தில் இதற்கான நேரடியான
மருந்து இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் வேறு மருந்துகள் மூலம் நோய் எதிர்ப்பு
சக்தியை அதிகப்படுத்துவார்கள். ஆரம்ப நிலை என்றால் சுலபமாக சரிசெய்துவிட முடியும்.
பவளமல்லி
சளி, இருமல் தொந்தரவுக்கு, கொரோனா
மட்டுமே காரணமாக இருக்காது. வேறு சாதாரண காரணங்கள்கூட இருக்கலாம். ஆகவே இருமல்,
தும்மல் என்றாலே கொரோனாவோடு தொடர்புபடுத்தி பதற்றமடையாதீர்கள். எந்தவொரு
பாதிப்புக்குமே, மருத்துவ ஆலோசனைதான் முதன்மையே தவிர, பயமோ பதற்றமோ இல்லை.
பதற்றமின்றி நிதானமாக எதையும் அணுகுங்கள் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக
உள்ளது. எத்தகைய கொடிய நோய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்
எந்தவிதமான கை வைத்தியங்களும் தப்பில்லை. பக்க விளைவுகள் எற்படுத்தாது. பவளமல்லிச்
செடி கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்கும் என்று சித்த
வைத்தியர்கள் கூறியுள்ளனர்.
அகத்தியர்
சித்த வைத்தியம்
பவளமல்லிச் செடியின் ஐந்து இலைகளை
சின்ன துண்டுகளாக்கி 200 மில்லி தண்ணிரில் போட்டுக் கொதிக்க வைத்து அதை 100
மில்லியாக சுண்டும்வரைக் காய்ச்சியெடுத்து இரண்டு மிளகு, மூன்று சொட்டு எலுமிச்சை
சாறு சேர்த்து தினம் மூன்று முறை குடிக்கலாம். முருங்கைக் கீரையை ஆய்ந்து
தண்ணீரில் சுண்டக் காய்ச்சி அத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து தினம் காலை வெறும்
வயிற்றில் சாப்பிடலாம் என்று ஆலோசனை கூறியுள்ளார் விக்கிரவாண்டி ரவிச்சந்திரன்.
இவர் ஒரு சித்த வைத்தியர்.
போதி
தர்மர் சொன்ன சிகிச்சை
போதி தர்மர் அருளியதாக விப்ரானா
ஹெர்பல்ஸ் சிவசங்கரன் சொல்லும் இன்னுமொரு வைத்தியமுறை: வேப்பிலை மற்றும்
கீழாநெல்லி இலை இரண்டையும் சம அளவில் அரைத்து பேஸ்ட்டாக்கி லேகிய உருண்டை மாதிரி
செய்து தினம் 50 கிராம் அளவுக்கு வெறும் வயிற்றில் மூன்று தினங்கள் சாப்பிடலாம்.
அடுத்த ஒரு மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிடக் கூடாது. இதெல்லாம் நோய்த் தொற்று
வந்தபிறகும் சாப்பிடலாம். வருவதற்கு முன் எச்சரிக்கைத் தடுப்பாகவும் சாப்பிடலாம்
என்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக