தண்டாயுதபாணி
சிலை முழுவதும் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், இரவில் சிலையில் இருந்து அதிக
அளவிலான வியர்வை பெருக்கெடுத்து ஓடும். அதனால், ராக்கால பூஜையின் போது, நவபாஷாண
சிலையின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. மறுநாள்
அதிகாலையில் சந்தனம் கலையப்படும் போது, அந்த சந்தன காப்பில் வியர்வைத் துளிகள்
பச்சை நிறத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும். அதே போல் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில்
வியர்வை நீரும் சேகரிக்கப்படும். அந்த வியர்வைத் துளியும், பச்சை நிறத்திற்கு
மாறிய சந்தனமும் அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை கொண்டதாக இருக்கும். இது
கவுபீன தீர்த்தம் எனப்படும். இது வேறெங்கும் காணமுடியாத அதிசயமாகும்.
தமிழகத்தில் உள்ள மிகவும் பழமையான
இந்து கோவில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் புகழ்பெற்ற கோவில்களாக இருந்து
வருகிறது. அதிலும் மிகவும் பழமையான புகழ்பெற்ற கோவிலாக இருந்தால், அக்கோவில்களில்
பின்பற்றப்படும் நடைமுறைகளும், பூஜை முறைகளும் அதிசயக்கத்தக்க வகையில் இருக்கும்.
அவ்வாறான பூஜை முறைகளை காண்பதற்காகவே பக்தர்கள் காத்துக்கிடப்பதுண்டு.
அதிலும் மிகப்பழமையான பாடல் பெற்ற
தலங்கள் என்றால், அக்கோவில்களின் நடைபெறும் பூஜைகளை கண்டு தரிசிப்பதற்காகவே
பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அது போலவே, தமிழ்க் கடவுளான முருகனின் அறுபடை
வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி,
பழமுதிர்ச்சோலை ஆகிய கோவில்கள் என்றால், வைகாசி விசாக திருநாள், ஆடி கிருத்திகை
நாள், ஐப்பசி மாத சூரசம்ஹாரம், தைபூச திருநாள், மாசி மகம் திருநாள் மற்றும்
பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் முருகனை காண்பதற்காகவே பாதயாத்திரையாகவும்,
காவடி தூக்கிக் கொண்டும் வருவதுண்டு.
பன்னீர் இலை விபூதி மகிமை
முருகனின் இரண்டாம் படைவீடான
திருச்செந்தூர் சுப்ரமணியர் கோவிலில் அதிகாலை விஸ்வரூப தரிசனத்தை காணவும், இரவில்
பள்ளியறை பூஜையை காணவும் அதிக அளவில் பக்தர்கள் காத்திருப்பதுண்டு. காரணம், அதகாலை
விஸ்வரூப தரிசனத்தின் போது பன்னீர் இலை விபூதி பிரசாதம் கொடுப்பது வழக்கமாகும்.
பன்னீர் இலை விபூதி பிரசாதத்தை வாங்குவதற்காகவே விஸ்வரூப தரிசன நேரத்தில் அதிக
அளவிலான பக்தர்கள் சுப்ரமணியர் சன்னதி முன்பாக காத்திருப்பார்கள். பன்னீர் இலை
விபூதியை நோய் தீர்க்கும் அருமருந்தாக பயன்படுவதால், அதற்காகவே அநேக பக்தர்கள்
காத்திருப்பார்கள். இதே போல பழனி முருகன் கோவிலில் மூலவரின் வியர்வையும் அபிஷேக
சந்தனமும் அருமருந்தாகப்பயன்படுகிறது.
நவபாஷாணத்தால் உருவான பழனி முருகன்
முருகனின் மூன்றாவது படை வீடான திரு
ஆவினன்குடி எனப்படும் பழனி ஸ்ரீதண்டாயுதபாணி திருக்கோவிலில் மூலவர் சிலையானது
நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும். அகத்தியரின் நேரடி சீடரான போகர் சித்தரால்
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது. இதில் லிங்கம்,
குதிரைப்பல், கார்முகில், ரச செந்தூரம், வெள்ளை பாஷாணம், ரத்த பாஷாணம், கம்பி
நவரசம், கவுரி பாஷாணம், சீதை பாஷாணம் என 9 வகையான மிக அபூர்வ மூலிகைகள்
அடங்கியுள்ளன.
போகர் உருவாக்கிய அபூர்வ சிலை
நவபாஷாண சிலையை, தன்னுடைய சீடரான
புலிப்பாணி சித்தர் உள்ளிட்ட மற்ற சீடர்களின் உதவியுடன் கன்னிவாடி என்ற இடத்தில்
உள்ள மெய்கண்ட சித்தர் குகையில் உருவாக்கினார். நவபாஷாண சிலையை உருவாக்கிய போகர்
சித்தர், சிலையை பிரதிஷ்டை செய்வதற்கு செவ்வாய் கிரகத்தின் ஆதிக்கம் அதிக அளவில்
இருக்கும் இடத்தை தேடினார். அப்போது அதற்கு மிகப் பொருத்தமான இடம் இந்த திரு
ஆவினன்குடி எனப்படும் பழனி மலை என்பதை உணர்ந்து, அங்கேயே பிரதிஷ்டை செய்தார்.
அதிகாலை தரிசனம்
இக்கோவிலிலும் அதிகாலை 4 மணி முதலே
பக்தர்கள் மூலவரான தண்டாயுதபாணி சன்னதிக்கு முன்பாக காத்துக் கிடப்பார்கள்.
மலைக்கோவிலில் அதிகாலை 5:40 மணிக்கு விஸ்வரூப தரிசனம், காலை 6:5 மணிக்கு விலா
பூஜை, காலை 8 மணிக்கு சிறுகால சாந்தி பூஜை, 9 மணிக்கு கால சாந்தி பூஜை, நண்பகல் 12
மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 5:30 மணிக்கு சாயரக்ஷா பூஜை, இரவு 8 மணிக்கு
ராக்கால பூஜை நடத்தப்பட்டு பின்பு நடை சாத்தப்படும்.
மற்ற நேரங்களில் எல்லாம்
தண்டாயுதபாணியை தரிசிக்க வழக்கமான அளவிலேயே பக்தர்களின் கூட்டம் இருந்தாலும்,
அதிகாலை 4 மணி முதலே அதிக அளவிலான பக்தர்கள் மூலவர் சந்நதிக்கு முன்பாக
கூடிவிடுவதுண்டு. அதற்கு காரணம், அதிகாலையில் பிரசாதமாக தரப்படும் கவுபீனத்
தீர்த்தம் தான். இந்த கவுபீல தீர்த்தம் அருமருந்தாக கருதப்படுவதால் தான், அதை
வாங்குவதற்கு தான் அந்த அதிகாலை நேரத்தில் பக்தர்கள் காத்துக்கிடப்பார்கள்.
பெருக்கெடுக்கும் வியர்வை துளிகள்
மூலவரான தண்டாயுதபாணி சிலை முழுவதும்
நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதால், இரவில் சிலையில் இருந்து அதிக அளவிலான வியர்வை
பெருக்கெடுத்து ஓடும். அதனால், ராக்கால பூஜையின் போது, நவபாஷாண சிலையின் மார்பில்
மட்டும் வட்ட வடிவில் சந்தனக் காப்பு சாத்தப்படுகிறது. அதே போல் சிலையின் புருவ
மத்தியில் ஒரு பொட்டு அளவில் சந்தனம் வைக்கப்பட்டு, சிலைக்கு அடியில் ஒரு
பாத்திரமும் வைக்கப்படும்.
பச்சை நிறத்தில் சந்தனம்
பச்சை நிறத்தில் சந்தனம்
மறுநாள் அதிகாலையில் சந்தனம்
கலையப்படும் போது, அந்த சந்தன காப்பில் வியர்வைத் துளிகள் பச்சை நிறத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கும். அதே போல் சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள பாத்திரத்தில்
வியர்வை நீரும் சேகரிக்கப்படும். அந்த வியர்வைத் துளியும், பச்சை நிறத்திற்கு
மாறிய சந்தனமும் அறிவியலை மிஞ்சும் மருத்துவத் தன்மை கொண்டதாக இருக்கும். இது
கவுபீன தீர்த்தம் எனப்படும். இது வேறெங்கும் காணமுடியாத அதிசயமாகும். கவுபீன
தீர்த்தத்தின் மருத்துவ குணம் அறிந்த பக்தர்கள் நூற்றுக்கணக்கில் அதிகாலை 4
மணிக்கு மலைக் கோவிலின் மூலவர் சந்நதிக்கு முன்பாக குவிந்து விடுவார்கள். இது
காலம் காலமாக நடந்து வரும் நிகழ்வாகும். மருத்துவ குணம் நிறைந்த அபிஷேக
சந்தனத்தின் மகிமை இன்றைக்கும் பல பக்தர்களின் நோய்களை தீர்க்கிறது என்பதே உண்மை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக