ஒருவருடைய பிறந்த நேரத்தை வைத்து அவருடைய ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்து பலன்களை தெரிந்து கொள்கிறோம். அதுபோலவே ஒருவரின் கை அமைப்பை வைத்து அவரைப் பற்றி முழுமையாக கூற முடியும். அந்த வகையில் கைரேகையில் சதுர கை அமைப்பு உள்ளவர்களின் குணநலன்களை பற்றி அறிந்து கொள்வோம்.....!
சதுர கை அமைப்பு :
கைரேகையில் சதுர கை அமைப்பு சிறப்பு கை என்றும் அழைக்கப்படுகிறது. இதை சூரியனின் ஆதிக்கம் உள்ள கை எனலாம்.
இந்த கை அமைப்பு சதுர வடிவில் இருக்கும். விரல்களுக்கிடையே இடைவெளி இருக்காது.
உள்ளங்கை மிருதுவாகக் காணப்படும். விரல் நகங்களுக்கு அடுத்துள்ள முடிச்சும் அதற்கு அடுத்துள்ள பெரிய முடிச்சும் உயரமின்றி சமமாக காணப்படும்.
குணநலன்கள் :
சதுர கை அமைப்பு கொண்டவர்கள் மிகவும் எளிமையானவர்களாக இருப்பார்கள்.
தங்களால் முடியாத காரியங்களில் ஈடுபட மாட்டார்கள். செலவு செய்வதில் நிதானம் இருக்கும்.
இறைவனிடம் பயமும், பக்தியும் கொண்டவர்கள். யாருடனும் சண்டையிட விரும்ப மாட்டார்கள்.
வீண் வம்பு சண்டைகள் தேடி வந்தால் விட மாட்டார்கள். அனைவரிடமும் பாசமுடன் நடந்து கொள்வார்கள்.
பெரும்பாலும் இந்த சதுர கை அமைப்பு கைகள் ஆண்களுக்கே இருக்கும். எதிரிகளிடமும் இரக்கம் காட்டுவார்கள்.
அழகையும், உணவையும் ரசிப்பார்கள். செய்கின்ற தொழிலில் முன்னேற்றம் காண முயல்வார்கள்.
தான, தர்மங்களில் ஈடுபாடு கொண்டவர்கள்.
அனைவரையும் நம்புவதால் சில சமயம் ஏமாற்றத்தையும் அடைவார்கள். பிறரின் தூண்டுதல் இவர்களுக்கு முன்னேற்றத்தை அளிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக