வோடாபோன்
நிறுவனம் அதன் மூன்று திட்டங்களின் மீது ஸ்பெஷல் ஆபர் ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சமீபத்திய
நடவடிக்கையானது "வாடிக்கையாளர்களே! சேவையை விட்டு வெளியே போக வேண்டாம்" என்று
சொல்லாமல் சொல்வது போல் உள்ளது. மதில் மேல் பூனை என்கிற நிலைப்பாட்டில் உள்ள தொலைதொடர்பு
நிறுவனமான வோடபோன் மிகவும் தாமதமாக அதன் பயனர்களுக்கு ஒரு அற்புதமான ஆபரை அறிமுகம்
செய்துள்ளது. (சமீபத்தில் வோடாபோன் நிறுவனத்திற்கு மூடுவிழா நடக்கலாம் என்கிற அளவிற்கு
தகவல்கள் வெளியாகின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது).
குறிப்பிட்ட
சில திட்டங்களுக்கு டபுள் டேட்டாவை நன்மை!
கடந்த
டிசம்பரில் நிகழ்த்தப்பட்ட விலை உயர்வுக்குப் பின்னர், தொலைதொடர்பு நிறுவனங்களான
வோடபோன், ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகியவைகள் ஒன்றுக்கு ஒன்று கடுமையான போட்டியை
வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டு வருவதில் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு
வருகிறது. அப்படியானதொரு நடவடிக்கையாக வோடபோன் நிறுவனம் ஒரு சிறப்பு திட்டத்தை
அறிமுகப்படுத்தியது. அதாவது குறிப்பிட்ட சில திட்டங்களின் கீழ், டபுள் டேட்டாவை
நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அந்த குறிப்பிட்ட திட்டங்கள் வோடாபோன்
ரூ.249, ரூ.399, ரூ.599 ஆகும். இந்த திட்டத்தின் வழக்கமான நன்மைகள் என்ன? தற்போது
அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைக்கு பின்னர் என்னென்ன நன்மைகளை வழங்குகிறது?
என்பதை பற்றி அறிய தொடர்ந்து படிக்கவும்.
டபுள் டேட்டா நன்மை
என்றால் என்ன? இந்த சலுகை எப்போது வரை அணுக கிடைக்கும்?
உதாரணமாக,
ஒரு திட்டம் ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கினால், அது தப்பும்
டேட்டா நன்மையின் கீழ், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவாக அதிகரிக்கும். இருப்பினும்,
குறிப்பிட்ட திட்டங்களின் விலைகளில் அதிகரிப்பு இருக்காது. இது ஒரு குறிப்பிட்ட
காலத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக
நீங்களொரு "வெறுப்படைந்த" வோடாபோன் பயனர் என்றால், இருப்பினும் வோடாபோன்
சேவையை விட்டு வெளியேற விரும்பவில்லை என்றால், இந்த சிறப்பு சலுகையை முயற்சித்து
பார்த்தபின் ஒரு முடிவுக்கு வரவும்.
டபுள் டேட்டா
சலுகையின் கீழ் ரூ.249 திட்டத்தின் நன்மைகள்:
ஆரம்பத்தில்
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவை வழங்கிய வோடாபோன் ரூ.249 திட்டமானது இப்போது ஒரு
குறிப்பிட்ட காலம் வரை ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கும். இந்த
ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை அப்படியே தான் இருக்கும், எந்த மாற்றமும்
ஏற்படுத்தப்படாது. டேட்டா நன்மைகளை தவிர்த்து, இந்த திட்டம் அனைத்து
நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புகளை வழங்குகிறது. இதன் செல்லுபடியாகும்
காலம் 28 நாட்கள் ஆகும். இந்த ப்ரீபெய்ட் திட்டமானது வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5
போன்றவைகளுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது.
டபுள் டேட்டா
சலுகையின் கீழ் ரூ.399 திட்டத்தின் நன்மைகள்:
முன்னதாக
ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவுடன் வந்த வோடாபோன் ரூ.399 திட்டமானது
இப்போது டபுள் டேட்டா சலுகையில் கீழ் ஒரு நாளைக்கு 3 ஜிபி அளவிலான டேட்டாவை
வழங்கும். இந்த பேக் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற அழைப்புடன் 56
நாட்கள் என்கிற செல்லுபடியையும் கொண்டுள்ளது. ஸ்ட்ரீமிங் ஆப்களுக்கான வோடபோன் ப்ளே
மற்றும் ஜீ 5 ஆகியவற்றுக்கான இலவச சந்தாவுடன் வரும் இந்த திட்டம் வோடாபோன் ரூ.249
திட்டத்தை போன்றே நன்மைகளை வழங்கும் நீட்டிக்கப்பட்ட வேலிடிட்டியை கொண்ட ஒரு
திட்டமாகும்.
டபுள் டேட்டா
சலுகையின் கீழ் ரூ.599 திட்டத்தின் நன்மைகள்:
வோடாபோன்
ரூ 599 க்கு வரும் போது, இந்த திட்டம் ரூ.399 மற்றும் ரூ .249 திட்டத்திற்கு
ஒத்ததாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு நாளைக்கு 1.5 ஜிபி அளவிலான டேட்டாவை
வழங்குகிறது, ஆனால் இப்போது அது ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது, மேலும்
இது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். இது வோடபோன் ப்ளே மற்றும் ஜீ 5 போன்ற
ஆப்களுக்கான இலவச சந்தாவுடன் வருகிறது. இருப்பினும், இதன் டபுள் டேட்டா சலுகையானது
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அணுக கிடைக்கும். வோடபோனின் இந்த டபுள்
டேட்டா சலுகையானது அதன் பயனர்கள் ஏராளமான பணத்தை மிச்சப்படுத்த உதவும், ஏனெனில்
இந்த மூன்று திட்டங்களும் எந்த விதமான கூடுதல் கட்டணமும் வசூலிக்காமல் இரட்டிப்பு
டேட்டா நன்மையை வழங்குகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக