மின்சார வாகன உற்பத்திக்குள் நுழைந்துவிட்டது டிவிஎஸ் மோட்டார் கம்பெனி. அதற்காக அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ள எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் ஐகியூப். இந்தியாவின் இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் பெருநிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோவுக்கு அடுத்ததாக, டிவிஎஸ் மின் வாகன உற்பத்தியில் கால்பதித்துள்ளது.
டிவிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள
முதல் மின்சார ஸ்கூட்டர் தான் கியூப். இதன்மூலம் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத
பசுமை வாகன உற்பத்தியில் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளது டிவிஎஸ். முழுமையாக உள்நாட்டிலேயே
உற்பத்தி செய்யப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், ஒசூரிலுள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் தொழிற்சாலையில்
உற்பத்தி செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ் ஐகியூப் மின்சார ஸ்கூட்டருக்கு ரூ. 1.15 லட்சம் (ஆன்ரோடு, பெங்களூரு) விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு பெங்களூருவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர், விரைவில் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அறிமுகமாகவுள்ளது.
இந்த மின்சார ஸ்கூட்டரில் பல்வேறு நவீன கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ரெட்ரோ-டிசைன் கொண்ட இந்த ஸ்கூட்டரி ஒரு ப்ரீமியம் தர மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மற்ற போட்டியாளர்களுக்கு இது எத்தகைய போட்டியை வழங்குகிறது என்று விரிவாக பார்க்கலாம். ஓசூரிலுள்ள டிராக்கில் டிவிஎஸ் ஐகியூப் மின்சார ஸ்கூட்டரை ஓட்டிப்பார்க்கும் வாய்ப்பு சமயம் தமிழ் இணையதளத்திற்கு கிடைத்தது. அதன்படி, இந்த ஸ்கூட்டரில் இடம்பெற்றுள்ள பல்வேறு முக்கிய விஷயங்கள் தெரியவந்துள்ளன.
வடிவமைப்பு & ஸ்டைலிங்:
கவர்ந்திழுக்கும் வடிவமைப்பை
இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. அதற்கு தகுந்தாற்போல ஸ்டைலிங்கும் செய்யப்பட்டுள்ளது.
நவீன அம்சங்களை முன்னிறுத்தி வடிவமைப்பும் ஸ்டைலிங்கும் அடக்கமான அளவுடன் வழங்கப்பட்டுள்ளது.
டிவிஎஸ் நிறுவனத்தின் மற்ற பெட்ரோல் ஸ்கூட்டர்களிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மாடலாகவுள்ளது
ஐகியூப் மின்சார ஸ்கூட்டர். அதன்படி, ஸ்கூட்டருக்கு முழுவதுமாக எல்.இ.டி விளக்கு அமைப்புகள்
வழங்கப்பட்டுள்ளன. வாகனத்தின் முகப்பு பகுதி அடக்கமாக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இதனுடைய ஹைலைட்டுகள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. மிகவும் மெல்லியதான
இந்த முகப்பு விளக்குகளுக்கு பக்கவாட்டில் அமைக்கப்பட்டுள்ள டர்ன் இண்டிகேட்டர்களும்
எல்.இ.டி திறனில் வழங்கப்பட்டுள்ளன.
ஸ்கூட்டரின் பக்கவாட்டு பேனல்களில் IQube Electric என்று பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது. உயர்ரக பொருட்களை வைத்து ஸ்கூட்டரின் இருக்கை வேயப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தின் பக்கவாட்டு பகுதியில் காற்றை வெளியேறும் வசதியுள்ளது. ஸ்கூட்டரின் பேட்டரியில் இருந்து உருவாகும் சூடான காற்று இதன்மூலம் வெளியேறும். ஐகியூப் மின்சார ஸ்கூட்டரின் பின்பகுதியில் மெல்லிய எல்.இ.டி டெயில் லைட்டுகள் உள்ளன. இது முகப்பு விளக்கு தோற்றத்துடன் கூடிய வடிவமைப்பை பெற்றுள்ளது. மேலும், பின்பக்க விளக்கின் இரண்டு பக்கங்களிலும் எல்.இ.டி டர்ன் இண்டிகேட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. பின்னால் அமர்ந்து வருபவர்கள் பிடித்துக் கொள்ள சிங்கிள்-பீஸ் கிராப் ரெயில் வழங்கப்பட்டுள்ளது. வெறும் வெள்ளை நிறத்தில் மட்டுமே டிவிஎஸ் ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு கிடைக்கும்.
சிறப்பம்சங்கள்:

டிவிஎஸ் நிறுவனத்தின் சமீபத்திய
Smart XConnect தொழில்நுட்பத்துடன், பல்வேறு நவீன கட்டமைப்புகள் ஐகியூப் மின்சார ஸ்கூட்டரில்
உள்ளன. இந்த வாகனத்தில் 5.5 அங்குலத்தில் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ப்ளூடூத்
வசதி உள்ளிட்டவை உள்ளன. இதன்மூலம் ஸ்கூட்டருடன் ஸ்மார்ட்போனை இணைத்துக் கொள்ள முடியும்.
அதற்காக டிவிஎஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள செயலி ஐகியூப் தான். இதை வைத்து ஸ்கூட்டரின்
இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டருடன் இணைத்துக் கொள்ளலாம். இதன்மூலம் ஸ்கூட்டரின் 58 விதமான
சிறப்பம்சங்களை பெறலாம்.
அதில் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், ரைடு அனலிடிக்ஸ், ஹை ஸ்பீடு அலெர்ட், ஜியோ-பென்சிங், செல்போன் அழைப்புகளை ஏற்கும் வசதி, செல்போனுக்கு வரும் குறுந்தகவல்களை பெறும் வசதி, வாகனம் எங்கே இருக்கிறது என்பதை கண்டறியும் வசதி, பேட்டரி திறன், வாகனத்திற்கும் ஓட்டுநருக்கும் இருக்கும் இடைவெளி, பேட்டரியில் இருக்கும் சார்ஜிங் அளவு, ரிஜீனரெஷன் இண்டிகேஷன் போன்ற சிறப்பம்சங்கள் அவற்றில் அடங்கும்.
டிவிஎஸ் ஐகியூப் மின்சார ஸ்கூட்டரில் ஈகோ மற்றும் பவர் என இரண்டு டிரைவிங் மோடுகள் உள்ளன. டிரைவிங் மோடுகளுக்கு ஏற்றவாறு பேட்டரியின் செயல்திறன் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பைக்கில் பல்வேறு பாதுகாப்பு கட்டமைப்புகள் உள்ளன. சைடு-ஸ்டாஇன் பவர் கட்-அப் சென்சார், யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், பெரிய ஸ்டோரேஜ் வசதி, பார்க்கிங் அசிஸ்ட் சிறப்பம்சங்கள் உள்ளன.
இதிலுள்ள பார்க்-அசிஸ்ட் சிறப்பம்சத்தை வைத்து ஸ்கூட்டரை முன் மற்றும் பின்பக்கத்தில் ஓட்டிச்செல்லலாம். முன்பக்கத்தில் பார்க் அசிஸ்ட் தேவைப்படும் போது மணிக்கு 12 கி.மீ வேகத்தில் இந்த ஸ்கூட்டர் செல்லும். அதேபோல, பின்பக்கத்தில் தேவைப்படும் மணிக்கு 3 கி.மீ வேகத்தில் செல்லும். ரிவெர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட்டில் ஸ்கூட்டர் செல்லும் போது, எச்சரிப்பதற்காக பீப் ஒலியும் சேர்ந்து ஒலிக்கும்.

டிவிஎஸ் ஐகியூப் ஸ்கூட்டரில் 4.4kW ஹப் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது. மூன்று லித்தியம்-அயன் பேட்டரியுடன் இந்த மோட்டார் கூட்டணி அமைத்துள்ளது. அவற்றில் ஒரு பேட்டரி கால் வைக்கும் இடத்திலும், மற்ற இரண்டு பேட்டரிகள் இருக்கைக்கு அடியிலும் உள்ளன. இதிலிருக்கும் Battery Management System மூலம் பேட்டரியிலுள்ள ஆற்றலை கண்காணிக்கலாம். 4.4kW எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 2.25kWh பேட்டரி பேக் மூலம் அதிகப்பட்சமாக 78 கி.மீ வரை செல்லலாம். இது ஈகோ மோடுக்குரிய அளவாகும். அதுவே பவர் மோடில் வைத்து செல்லும் போது அதிகப்பட்சமாக 55 கி.மீ வரை செல்லலாம்.
துவக்க நிலையில் இருந்து 40 கி.மீ வேகத்தை 4.2 விநாடிகளில் எட்டிப்பிடித்துவிடும் இந்த ஸ்கூட்டர் மணிக்கு 78 கி.மீ வேகத்தில் செல்லும். இந்த ஸ்கூட்டருக்கான ஹோம் சார்ஜிங் நிலையங்களை டிவிஎஸ் ஏற்படுத்தவுள்ளது. 15A பவர் சாக்கெட் முலம் இந்த ஸ்கூட்டருக்கு சார்ஜிங் செய்து கொள்ளலாம். ஏற்கனவே பெங்களூரில் 10 சார்ஜிங் நிலையங்களை டிவிஎஸ் நிறுவனம் கட்டமைத்துள்ளது. வரும் மாதங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்படும் என டிவிஎஸ் தகவல் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் பேட்டரியை 75 சதவீதம் சார்ஜி செய்ய 4 குறைந்தது மணிநேரம் ஆகும். முழுமையாக சார்ஜ் செய்ய 5 மணிநேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயல்திறன் மற்றும் கையாளுமை:
டிவிஎஸ் ஐ-கியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்திறன் சிறப்பாக உள்ளது. இதனுடைய பிக்-அப், திராட்டின் ரெஸ்பான்ஸ், உள்நாட்டில் தயாரான எலெக்ட்ரிக் மோட்டார் போன்றவை கையாள்வதற்கு சிறப்பாக உள்ளது. கையடகத்தில் இருப்பது போன்ற உணர்வை தரும் இந்த ஸ்கூட்டர் நல்ல பேலன்ஸை வழங்குகிறது. மேலும் கார்னரில் செல்லும் போது ஸ்கூட்டரை வேகமாக இயக்கினால் கூட, வாகனம் கட்டுக்குள் உள்ளது.
முன்பக்கத்தில் டெலஸ்கோப்பில் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்ஸபர்கள் ஆகியவை சஸ்பெஷன் தேவையை பூர்த்தி செய்கின்றனர். இதன்மூலம் மேடு பள்ளங்களிலும் செல்லும் போது ஸ்கூட்டரின் செயல்பாடு சிறப்பாகவே உள்ளது. இருந்தாலும், முறையான பயன்பாட்டுக்கு வந்த பின்னரே, ஸ்கூட்டரின் இயக்கம் குறித்து இறுதி முடிவு செய்ய முடியும்.
ஸ்கூட்டரின் முன்சக்கரத்தில் 220 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பக்கத்தில் 130 மிமீ டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. ஸ்டான்டர்ட்டாக சிபியூ பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்கூட்டர் மிகவும் உறுதியான நிறுத்தத்தை வழங்குகிறது. வாகனத்தின் இரண்டு பக்கங்களிலும் 12 இஞ்ச் டூப்லெஸ் டயர்கள் உள்ளன. இந்தியாவில் இந்த ஸ்கூட்டர் ஏத்தர் 450எக்ஸ், பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் மாடல்களுக்கு சரிநிகர் போட்டியை ஏற்படுத்தும்.
பெங்களூருவில் மட்டுமே தற்போது விற்பனைக்கு வந்துள்ள இந்த ஸ்கூட்டருக்கு ரூ. 5 ஆயிரம் முன்பணத்தில் புக்கிங் துவங்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் ஐகியூப் மாடலை வாங்க விரும்புவோர் ஆன்லைன் மூலமாகவோ அல்லது டிவிஎஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்களிடம் முன்பதிவு செய்யலாம். விரைவில் இதற்கான டெலிவிரி பணிகள் தொடங்கப்படவுள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக