ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் புதிய 2020 சி.ஆர்.எஃப்1100எல் ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளன. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.
புதிய 2020
ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குகள் ரூ. 15.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், இந்தியா)
ஆரம்ப விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக் தற்போது பல்வேறு மின்னணு
கட்டுப்பாட்டில் இயங்கும் சிறப்பம்சங்கள் மற்றும் கனெக்டெட் தொழில்நுட்பங்கள் கொண்டு
விற்பனைக்கு வந்துள்ளது.
புதிய 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக் ஸ்டான்டர்டு மற்றும் அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் என இரண்டு வேரியன்டுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த இரண்டு வேரியன்டுகளிலும் 1084 சிசி பேரலல்-ட்வின் எஞ்சினுக்கு மாற்றாக புதிய எஞ்சின் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் உயர்ரக அட்வெஞ்சர் ஸ்போர்ட்ஸ் மாடலில் ப்ரோ ஆக்டிவ் ஃபிரேம் வொர்க், உயரத்திற்கு ஏற்றவாறு அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்டுஸ்கிரீன், பெரிய எரிவாயு கலன், டியூப்லெஸ் டயர் கம்பேட்டிபிள் வயர்-ஸ்போர்க்ஸ், ஸ்டான்டர்டாக எஞ்சின் பேஷ் பிளேட்டுகள் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
புதிய 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்கின் இரண்டு வேரியன்டுகளிலும் பெரிய 6.5 அங்குல தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே போன்றவை ஸ்டான்டர்ட் அம்சமாக இடம்பெற்றுள்ளன.
புதிய மின்னணு சிறப்பம்சங்கள், மேம்படுத்தப்பட்ட ஹோண்டா செலக்டபிள் டிராக்ஷன் கன்ட்ரோல், 6-ஆக்சிஸ் இன்னெர்ஷியம் மெஷர்மென்ட் யூனிட், 3 நிலைகள் கொண்ட வீலி கட்டுப்பாட்டு அமைப்பு, எல்.இ.டி முகப்பு விளக்குகள், கார்கனிங் லைட்ஸ், டிசிடி கார்னரிங் டிடெக்ஷன் போன்ற சிறப்பம்சங்கள் இந்த வாகாத்தில் உள்ளன.
2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்குகள் 4 வித பவர் நிலைகளை கொண்டுள்ளது. அதில் ஒன்று எஞ்சினும், மற்ற மூன்று நிலைகளும் எலெக்ட்ரானின் எஞ்சின் பிரேக்கிலும் இடம்பெற்றுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள 1084 சிசி பேரலல்-ட்வின் யூனிட் மூலம் 101 பிஎச்பி பவர் மற்றும் 105 என்.எம் டார்க் திறன் அதிகப்பட்சமாக கிடைக்கும். இந்த எஞ்சின் வேரியன்டுக்கு ஏற்றவாறு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் டிசிடி கியார்பாக்ஸ் தேர்வுகளுடன் விற்பனைக்கு கிடைக்கும்
2020 ஆஃப்ரிக்கா ட்வின் பைக்கில் அலுமினியம் சிலிண்டர் சிலீவ்ஸ் உள்ளது. இதனுடன் ரீடிசைன் செய்யப்பட்ட எஞ்சின் கேஸிங் இடம்பெற்றுள்ளது. இதனுடைய அட்வெஞ்சர் மோட்டார்சைக்கிளின் எடை 2.5 கி.மீ குறைந்துள்ளது. மேனுவல் வெர்ஷன் 226 கிலோ எடையும், டிசிடி வெர்ஷன் 236 கிலோ எடையும் கொண்டுள்ளன.
இந்த பைக்கில் டூர், அர்பன், கிராவல் மற்றும் ஆஃப்-ரோடு என நான்கு விதமான ரைடிங் மோடுகள் உள்ளன. மேலும் கூடுதலாக இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. அதை ஓட்டுநர் தன்னுடைய தேவைக்கு ஏற்றவாறு கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.
2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக்கின் எரிவாயு கலன் 18.8 லிட்டர் கொள்திறன் கொண்டது. முன்பக்கத்தில் ஷோவா 45 மிமீ கேட்ரிஜ்-டைப் இன்வெர்டட் டெலஸ்கோப்பிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்பக்கத்தில் மோனோபிளாக் ப்ரோ-லிங்குடன் கூடிய அலுமினியம் ஆகியவை சஸ்பென்ஷன் தேவையை பூர்த்தி செய்கின்றன.
மேலும், பைக்கின் முன் சக்கரத்தில் adial-fit 4 பிஸ்டன் கேலிபர்களுடன் கூடிய 310 மிமீ டிஸ்க் பிரேக் உள்ளது. பின்பக்கத்தில் சிங்கிள்-பிஸ்டன் கேளிபருடன் கூடிய 256 மிமீ பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பின்சக்கரத்தில் ஏபிஎஸ் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதை தேவையில்லை என்றால் அணைத்துவிடலாம்.
இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கப்பட்டுவிட்டதாக ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இதனுடைய டெலிவிரி வரும் மே மாதம் முதல் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுகத்தின் வாயிலாகவே 2020 ஹோண்டா ஆஃப்ரிக்கா ட்வின் பைக் நாட்டின் பிரபலமான அட்வெஞ்சர் மோட்டார்சைக்கிளாக மாறியுள்ளது. இந்த பைக் டுகாட்டி மல்டிஸ்டார்டா, ட்ரையம்ப் டைகர், பிஎம்டபுள்யூ ஜிஎஸ்1250 ஆகிய மாடல்களுக்கு சரிநிகர் போட்டியை ஏற்படுத்தும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக