Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

வியாழன், 19 மார்ச், 2020

Tik Tok வீடியோவால் நண்பர்களே நண்பனைக் கொன்ற கொடூரம்! போலீசில் சிக்கியது எப்படி?


ஜாலியாக ஊர் சுற்று டிக்டாக் செய்த ஜெய்வின்
டிக் டாக் வீடியோவால் இளைஞர் கொலையான சம்பவம் கடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து டிக் டாக்கில் வித விதமாக வீடியோ பதிவிட்டு வந்த நண்பர்களுக்கு இடையில் நடந்த மோதலில் நண்பர்களே இளைஞரைக் கழுத்து அறுத்து கொலை சடலத்தை மறைத்து வைத்துள்ளனர். ஆனால், காவல்துறையினரிடம் இவர்கள் சிக்கியது எப்படி என்று தெரியுமா?
ஜாலியாக ஊர் சுற்று டிக்டாக் செய்த ஜெய்வின்
கடலூர் மாவட்டத்தில் உள்ள முதுநகர் சிவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் பெஞ்சமின் - பிரதீபா தம்பதியின் மகன் ஜெய்வின் ஜோசப் (18), கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு கவலை எதுவும் இல்லாமல் தனது நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்று வந்து டிக் டாக்கில் பல விதமாக வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
காணாமல் போன ஜெய்வின்
இப்படி ஜாலியாக டிக்டாக் வீடியோ போஸ்ட் செய்துகொண்டிருந்த ஜெய்வின் 4ம் தேதி அன்று வீடு திரும்பவில்லை. பதட்டம் அடைந்த பெற்றோர் நண்பர்களிடம் விசாரித்துள்ளனர், யாரும் எதுவும் தெரியாதென்று பதில் அளித்துள்ளனர். பெற்றோர் எங்கு தேடியும் ஜெய்வின் கிடைக்காததினால், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்
போலீசாரின் சந்தேகம்
காணாமல் போன தனது மகனைக் கண்டுபிடித்துத் தருமாறு ஜோசப்பின் தாய் பிரதீபா கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து ஜெய்வினை தேடி வந்தனர். ஜெய்வின் செல்போனை ஆய்வு செய்த போலீசாருக்கு அவரின் 7 நண்பர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

ஜெய்வின் மொபைல் சொன்ன உண்மை
காரணம் ஜெய்வின் கடைசியாக யார் யாரிடமெல்லாம் பேசினார் என்ற தகவலையும் சேகரித்த போது, அவர் இறுதியாக நண்பர்களிடம் தான் பேசி உள்ளார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முது நகர் பகுதியைச் சேர்ந்த 21 வயதான விஜய் மற்றும் காரைக்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதான பிரபு என்ற பிரபாகரன் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
நண்பர்களிடையே கேங் வார்
நண்பர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜெய்வின் பற்றிய மர்ம முடிச்சு அவிழ்க்கப்பட்டுள்ளது. ஜெய்வினுக்கும் அவரது நண்பர்களுக்கும் மோகன் சிங் தெருவைச் சேர்ந்த பெண் ஒருவருடன் பேசுவது தொடர்பாக பிரச்சினை ஏற்பட்டுள்ளது. பின்னர் இந்த பெண் விவகாரம் 'கேங் வாராக' மாறியுள்ளது. ஒற்றுமையாக இருந்த நண்பர்கள், இருதரப்பாகப் பிரிந்து அந்த பெண்ணிற்காகச் சண்டை போட்டிருக்கின்றனர்.
கொலை செய்ய திட்டம்
நண்பர்கள் மத்தியில் நடந்த கேங் வாரை ஜெய்வின் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதைத் தனது டிக் டாக் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த வீடியோ பதிவை கண்டா விஜய் மற்றும் பிரபாகரன் உள்ளிட்ட 7 பேருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. வீடியோவை நீக்குமாறு ஜெய்வினிடம் நண்பர்கள் கேட்க, அவர் முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் அவரை கொலை செய்ய நண்பர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
பரிதாபமாக நண்பர்களால் உயிரிழந்த ஜெய்வின்
ஆத்திரமடைந்த நண்பர்கள் ஜெய்வினை கொலை செய்வதற்காக காரைக்காடு உப்பனாற்றுப் பகுதிக்கு மது அருந்தலாம் என்று கூறி வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர். ஜெய்வின் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். மது போதை தலைக்கேறியதும் திட்டமிட்டபடி நண்பர்கள் இணைந்து ஜெய்வின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
கைது
பின்னர் கொலை செய்யப்பட்ட ஜெய்வினின் சடலத்தை உப்பனாற்றுப்பதியில் குழிதோண்டிப் புதைத்து விட்டு முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தலைமறைவாகியுள்ளனர். போலீஸ் விசாரணையில் அவர்கள் இருக்குமிடம் தெரியவந்துள்ளது. கடலூர் அருகே தலைமறைவாக இருந்த அந்த 5 பேரையும் டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக