வைரஸ் தொற்றுகள் பரவாமல் இருக்க.. குறிப்பாக
கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளாமல் இருக்க அடிக்கடி கைக் கழுவுதல் அவசியம், ஹாண்ட் சானிடைஸர்
பயன்படுத்துதல் அவசியம் என்கின்றனர். இதனால் மருத்துவர்களும் தண்ணீரை தாராளமாகப் பயன்படுத்தி
சோப்பு போட்டுக் கைக்கழுவுங்கள் என்று அடிக்கடி சொல்லி வருகின்றனர். ஆனால் அதற்கு எந்த
சோப் சிறந்தது என்பது சந்தேகம். அதேபோல் சாதாரண சோப் கொரோனாவை அழிக்குமா என்ற கேள்வியும்
ஒருபுறம் எழுகிறது.
ஆண்டிபயாடிக் சோப் மற்றும் சாதாரண சோப் என சந்தையில் இரண்டு விதமான சோப்புகள் உள்ளன. இதில் பலரும் ஆண்டிபயாடிக் சோப்தான் கிருமிகளை அழிக்கும் என நினைக்கின்றனர்.
ஆனால் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ( Food and Drug Administration) அப்படி எந்தத் தரவுகளும் இல்லை என்கிறது. மேலும் சாதாரண சோப்புகளிலேயே தரமான தயாரிப்பாக இருந்தால் அதுவே போதுமானது என்கிறது.
மேலும் இதுபோல் ஆண்டிபயாடிக் என்று கூறி விற்பனை செய்வது பொய்யானது . நான் அந்த சோப் பயன்படுத்துவதால்தான் பாதுகாப்பாக இருக்கிறேன். சாதாரண சோப் மற்றும் தண்ணீர் பாதுகாப்பற்றது என்று நினைத்தால் மிக மிகத் தவறு .
ஏனெனில் வைரஸுகள் ஃபேட்டி ஷெல் (fatty shell) மற்றும் லிபிட் மெம்பரேன் (lipid membrane) ஆகிய இரண்டால் பிணைந்திருக்கும். கொரோனா வைரஸிலும் இவை இருக்கும். சாதாரண சோப்பில் உள்ள மூலக்கூறுகள் இயற்கையாகவே இந்த இரண்டு கிருமிகளையும் அழிக்கும் வல்லமைக் கொண்டது. மேலும் கைகளின் மேல் படிந்திருக்கும் கொழுப்புத் திரை அடுக்கைப் பாதுகாக்கும் என விளக்கமளித்துள்ளது.அதேபோல் ஹாண்ட் சானிடைசர்களும் சோப்பு மற்றும் தண்ணீரைக் காட்டிலும் சிறப்பானது இல்லை என்கிறது.
அதாவது , சோப்பு, தண்ணீர் இல்லாத இடத்தில் பாதுகாப்பிற்காகப் அவசர தேவைக்குப் பயன்படுத்திக்கொள்ளவே ஹாண்ட் சானிடைஸர்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Centers for Disease Control and Prevention) தெரிவித்துள்ளது. அதிலும் அந்த சானிடைஸரில் குறைந்தது 60% - ஆவது ஆல்கஹால் இருக்க வேண்டும் என்கிறது. இந்த ஹாண்ட் சானிடைஸர் அழுக்கு, மண், கிரீஸ் போன்றவற்றால் கைகள் அழுக்கானால் எடுபடாது. சாதாரண சோப் மற்றும் தண்ணீர்தான் பெஸ்ட் என்கிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக