குஜராத் எம்.எல்.ஏவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதை தொடர்ந்து முதல்வரும் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதிலும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் குஜராத் எம்.எல்.ஏ இம்ரானுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவரது குடும்பம் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தீவிரமான கண்காணிப்புக்கு உட்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானியை நேரில் சந்தித்து பேசியிருந்தது தெரியவந்துள்ளது. அதை தொடர்ந்து முதல்வர் விஜய் ரூபானிக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என தெரிய வந்துள்ளது. எனினும் தன்னை 7 நாட்கள் தானே சுயத்தனிமை செய்து கொள்ள போவதாக முதல்வர் விஜய் ரூபானி அறிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக