லாக்டவுன் முடிந்தவுடன் உடனடியாக செய்யக்கூடாத விஷயங்களின் பட்டியல்கள்லாக்டவுன் எப்போது முடியும் என்று உங்களில் பெரும்பாலோர் கடுமையாக காத்திருப்பீர்கள். லாக்டவுன் முடிந்த பின்பு நீங்கள் உங்கள் நண்பர்களைச் சந்திக்கத் திட்டமிட்டிருக்கலாம், ஸாப்பிங் செய்ய திட்டமிட்டிருக்கலாம்.லாகௌடவுன் முடிந்ததும் வாழ்க்கை திடீரென இயல்பு நிலைக்கு திரும்பாது என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வது நல்லது. COVID-19 நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இன்னும் இருப்பதால், நீங்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்தை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். லாக்டவுன் முடிந்தவுடன் உடனடியாக நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்கள் இங்கே:
நோ சுற்றுலா
- லாக்டவுன் முடிந்த உடனே சுற்றுலாச் செல்ல திட்டமிட வேண்டாம். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு மக்கள் பயணம் செய்வதால் தான் உலகளவில் இத்தகைய நோய் பரவ வழிவகுக்கிறது.
- லாக்டவுன் விதிகள் தளர்த்தப்பட்டாலும், சில மாதங்களுக்கு குடும்பத்துடன் விடுமுறையைக் கழிக்க பயணம் செய்வதை திட்டமிட வேண்டாம்.
- சுற்றுலா பயணங்களை மேற்கொண்டு உங்கள் உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுவதை விட, வீட்டில் தங்கி பாதுகாப்பாக இருப்பதே நல்லது.
கைகளை கழுவும் பழக்கத்தை நிறுத்த வேண்டாம்
- COVID-19 இன் பரவலானது ஒரு நல்ல பழக்கத்தை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது, ஆதாவது அடிக்கடி கைகளை கழுவும் பழக்கம் தான்.
- கை சுகாதாரத்தை கடைப்பிடிப்பதன் மூலம் கொரோனா வைரஸைத் தடுப்பது மட்டுமல்லாமல், பல நோய்களைத் தடுக்கவும் உதவுகிறது.
- கொரோனா வைரஸின் பரவல் முடிவுக்கு வந்தாலும், உங்கள் கைகளை தவறாமல் கழுவும் இந்த நல்ல பழக்கத்தை நிறுத்த வேண்டாம்
- ஏனெனில் இது உங்களை நீண்ட காலங்களுக்கு ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
கிளப், பார் பார்ட்டி
- கிளப் மற்றும் பார்களுக்கு விருந்திற்கு செல்ல வேண்டாம். லாக்டவுன் முடிந்ததும் உங்கள் நண்பர்களை சந்திக்க ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பீர்கள்.
- பொதுவாக நண்பர்கள் அனைவரும் சந்திப்பதற்காக தேர்வு செய்யப்படும் இடம் கிளப் அல்லது கஃபே. இந்த இடங்களில் பொதுவாக கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இதில் நீங்கள் பார்ட்டி ஏற்பாடு செய்து சென்றால் தொற்று நோயை நாமே நமக்கு அழைத்துக் கொள்ளும் விதமாக அமைந்துவிடும்.
- அறிகுறியின்றி சிலருக்கு COVID 19 தொற்று இருப்பதால் அது பல வகையில் பலருக்கும் பரவக் கூடிய அபாயத்தை அதிகரித்துள்ளது.
- எனவே, சிறிது காலம் வீட்டிலையே தங்கியிருப்பது நல்லது, மேலும் சிறிது காலத்திற்கு உங்கள் நண்பர்களைச் சந்திப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
முகக்கவசத்தை தூக்கி எறிந்து விடாதீர்கள்
- “Prevention is better than cure” என்பதற்கு ஏற்றது போல நாம் பொது இடஙௌகளுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும்.
- நோய்த்தொற்றை தடுப்பதற்கு இது ஒரு சிறந்த வழி.நெரிசலான இடத்திற்குச் செல்லும் போதும்,ஷாப்பிங் செல்லும் கூடுதலாக முகக்கவசங்களை கையில் எடுத்துச் செல்ல வேண்டும்.
- வீட்டில் தயாரிக்கப்பட்ட முகக்கவசம் பயன்படுத்தினால் மிகவும் நல்லது. நாமாகவே நோய்த் தொற்றை தடுப்பதற்காக முகக்கவசத்தை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
- கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், சமூக இடைவெளியை குறைந்தது சிறிது காலத்திற்கு பின்பற்ற வேண்டும்
பொது இடங்களில்...
- பொது இடங்களில் சுவாச சுகாதாரத்தை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் இருமுவது மற்றும் தும்முவது எப்போதுமே ஒரு மோசமான பழக்கம் ஆகும்.
- இருமல் மற்றும் தும்மினால் ஏற்படும் நீர்த்துளிகள் தான் உலகளவில் COVID-19 என்னும் கொடிய நோய் அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ளது.
- எனவே, பொது இடங்களில் இருக்கும்போது உங்கள் சுவாச சுகாதாரத்தை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
- இருமலோ அல்லது தும்மலோ வரும் போது உங்கள் வாயை ஒரு டிஸு அல்லது கைகளை வைத்து மூடிக்கொள்ள வேண்டும்.
நோ விருந்து
வீட்டில் எந்த வகையான விருந்திற்கும் ஏற்பாடு செய்யக் கூடாது. சிலருக்கு அறிகுறிகளே இல்லாமல் COVID19 தாக்கும் இருப்பதால் யார்யாருக்கு தொற்று இருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியவில்லை.
ஆகையால் லாக்டவுன் முடிந்தாலும் சமூக விலகலை கடைபிடிப்பது நல்லது.
பெரிய விருந்துக்களை ஏற்பாடு செய்வதை தவிர்க்க வேண்டும்.
குடும்ப விசேஷத்திற்காக ஒன்று சேர்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
முடிந்தவரை சமூகக் கூட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக