Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

ஊரடங்கில் இப்படியொரு கெத்தான நடவடிக்கை- கான்ஸ்டபிளுக்கு குவியும் பாராட்டு!

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷஹரில் நேற்று காலை போலீஸ் கான்ஸ்டபிள் அருண் குமார் என்பவர் ஊரடங்கு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த காரை தடுத்து நிறுத்தினார். எதற்காக பயணம் மேற்கொண்டுள்ளீர்கள் என்று விசாரித்துள்ளார். இதையடுத்து பின் இருக்கையில் இருவர் அமர்ந்திருந்ததை கண்டார். காரில் போதிய சரீர இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்று கூறி அருண் எச்சரித்துள்ளார். பின்னர் ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை எடுத்துக் கூறி அனுப்பி வைத்தார்.

ஆனால் பின் இருக்கையில் அமர்ந்திருந்தது யார் என்று கான்ஸ்டபிள் அருண் குமாருக்கு தெரியவில்லை. அந்த காரில் மாவட்ட மேஜிஸ்டிரேட் ரவிந்திர குமார் பின்னால் அமர்ந்து வந்துள்ளார். அதாவது ஊரடங்கில் திடீர் ஆய்வு நடத்துவதற்காக வந்திருக்கிறார்.

இதனை அறியாத கான்ஸ்டபிள் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். அதற்கடுத்த சில மணி நேரங்களில் மாவட்ட மேஜிஸ்டிரேட்டிடம் இருந்து குமாருக்கு பாராட்டு கடிதம் வந்துள்ளார். மேலும் எஸ்.எஸ்.பியிடம் இருந்து ரூ.2000 ரொக்கம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

அப்போது தான் காரில் வந்தது மாவட்ட மேஜிஸ்டிரேட் என்று குமாருக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவர் இன்ப அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி புலந்த்ஷஹர் எஸ்.எஸ்.பி சந்தோஷ் குமார் பேசுகையில், சிகந்திராபாத் பகுதியில் கார் ஒன்றை கான்ஸ்டபிள் அருண் குமார் தடுத்து நிறுத்தியுள்ளார்.

பாஸ் இல்லாமல் வெளியில் வருவது ஊரடங்கு விதிகளை மீறுவதாகும் என்று கூறியுள்ளார். மேலும் காரில் மூன்று பேர் அமர்ந்து செல்லக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்று மீண்டும் விதிகளை மீறி நடந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பி வைத்துள்ளார். இவ்வளவு நேர்மையாக பணியாற்றிய கான்ஸ்டபிளை நினைத்துப் பார்க்கையில் மிகவும் பெருமையாக இருக்கிறது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக