கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகத்தில் உள்ள பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளது.
பல கோடிக்கணக்கான மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். இதனால் உலகில் பல முக்கிய தொழில்களும் முடங்கி இருக்கும் சூழ்நிலையில் ஒரு சில தொழில்கள் மட்டும் இந்த சூழ்நிலையை சாதகமாக கொண்டு பலன் பெற்று வருகின்றன.
அவற்றில் ஒன்று ஸ்ட்ரீமிங் தளமான நெட்ப்ளிக்ஸ்.
எப்போதும் இல்லாத அளவு குறுகிய காலத்தில் 15 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை நெட்பிளிக்ஸ் பெற்றுள்ளது.
மார்ச் இரண்டாவது வாரம் வரை சராசரி வளர்ச்சி இருந்தாலும், அதற்கு பிறகு இந்த திடீர் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணமாக சமீபத்தில் நெட்ப்ளிக்ஸ் அறிமுகப்படுத்திய புதிய தொடர்கள் மற்றும் வெளியிட்ட புதிய திரைப்படங்கள் காரணமாக கருதப்படுகிறது.
இந்த முதல் காலாண்டில் அதிக வாடிக்கையாளர்களாக 15.8 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது நெட்ப்ளிக்ஸ். இந்த வளர்ச்சி எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
கடந்த ஆண்டு பெற்றதை விட 22 சதவீதம் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 182 மில்லியன் வாடிக்கையாளர்கள் நெட்ப்ளிக்ஸுக்கு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக