Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 23 ஏப்ரல், 2020

இனி இந்தியாவில் வாரத்திற்கு 5,00,000 ரேபிட் டெஸ்ட் கருவி உற்பத்தி : SD Biosensor

கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுவரை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20ஆயிரத்தை நெருங்குகிறது . 

இதுவரை  640 பேர் பலியாகியுள்ளனர் 3,870 குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1383 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவிலிருந்து ரேபிட் டெஸ்ட் கருவிகள் இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது ,ஆனால் அதில் துல்லியமான தகவல்கள் வருவதில்லை என்றும் ரேபிட் கிட்டில் எடுக்கப்படும் பரிசோதனைகள் 6% முதல் 70% வரை மாறுபட்ட முடிவுகளாக வருவதாக குற்றச்சாட்டிய நிலையில், அடுத்த 2 நாள்களுக்கு ரேபிட் கிட்டில் மாநில அரசுகள் பரிசோதனை செய்ய வேண்டாம் என ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ,ஹரியானாவின் மானேசர் நகரத்தில் கொரோனா வைரஸிற்கான ரேபிட் டெஸ்ட்  கருவிகளைத் SD Biosensor என்ற நிறுவனம் தயாரிக்கத் தொடங்கியுள்ளது, இது வாரத்திற்கு 5,00,000 ரேபிட் டெஸ்ட் கருவிகளை தயாரிக்கும் எனவும்   மருத்துவ உபகரணங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் அதை பூர்த்தி செய்ய வரும் வாரங்களில் இது மேலும் மேம்படுத்தப்படும் என்று தென்கொரியாவில் உள்ள இந்திய தூதரகம் ட்வீட் செய்துள்ளது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக