நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால் மார்ச், ஏப்ரல் மாதங்களில் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் மின்சார பயன்பாட்டை அளவிடும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஜனவரி, பிப்ரவரி மாதங்களின் மின்அளவீட்டை அடிப்படையாகக் கொண்டு, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான மின் கட்டணத்தை நுகர்வோர் செலுத்தலாம் என்று மின்வாரியம் அறிவித்திருந்தது.
ஆனால், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இயங்காததன் காரணமாக, மின்வாரியம் தற்போது அறிவித்துள்ளப்படி மின்கட்டணத்தை செலுத்தினால், அதிகமாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது என தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இதையடுத்து, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் தங்களின் மின் பயன்பாட்டை புகைப்படம் எடுத்து அனுப்பலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
தங்களது பிரிவு அலுவலகத்தின் உதவிப் பொறியாளர், இளநிலைப் பொறியாளர் ஆகியோரின் மின்னஞ்சலுக்கோ, வாட்ஸ் அப் எண்ணுக்கோ இந்த புகைப்படத்தை தொழிற்சாலைகளின் நிர்வாகம் அனுப்பலாம்.

அதன் அடிப்படையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொழிற்சாலைகள் செலுத்த வேண்டிய மின்கட்டணம் எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மின்னஞ்சல் முகவரி, வாட்ஸ் அப் உள்ளிட்ட விவரங்களை tangedco.gov.in என்ற இணையதளத்தில் நுகர்வோர் பெறலாம் என்றும் மின்வாரியம் அறிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக