வியாழன், 9 ஏப்ரல், 2020

திருதிராஷ்டிரனின் ஆலோசனைக் கூட்டம் ...!

துரியோதனன் ஏமாற்றத்துடன் திரும்பி வந்ததை திருதிராஷ்டிரிடம் கூறினான். அதன் பிறகு திருதிராஷ்டிரன், ஒரு ஆலோசனை கூட்டத்தைக் கூட்டினான். அக்கூட்டத்தில் சகுனி, துரியோதனன், கர்ணன், துச்சாதனன் முதலானோர் வந்திருந்தனர். 

அங்கு பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் ஞானாசிரியனான சஞ்சயன் என்ற முனிவர் இருந்தார். நிலைமைக்கு ஏற்றவாறு உபதேசம் செய்வதில் வல்லவர் ஆவார். அவருடைய உபதேசத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டு அதனை பின்பற்றுவார்கள். சஞ்சய முனிவரைப் திருதிராஷ்டிரன் கௌரவர்களின் கருத்தை பாண்டவர்களுக்கு தெரிவிப்பதற்காக தூதுவனாக அனுப்பினான்.

முதலில் முனிவர் இந்தச் செயலை ஏற்றுக் கொள்வதற்குத் தயக்கம் கொண்டார். பின்பு திருதராட்டிரனின் வற்புறுத்தியதால் அதனை மறுக்க முடியாமல் பாண்டவர்களின் மனதைக் கலைக்க ஒப்புக்கொண்டு பாண்டவர்களை காண சென்றார். பாண்டவர்கள் தன் குலகுருவாகிய ஞானாசிரியராக இருந்த சஞ்சய முனிவரை மரியாதையோடு வரவேற்றனர். இத்தனை ஆண்டுகளுக்குப்பின்பு எங்களைத் தேடி வரக் காரணம் யாதோ! என்று தர்மன் கேட்டான். அதற்கு சஞ்சய முனிவர், உங்கள் மேலுள்ள அன்பால் உங்களுக்குச் சில நற்செய்திகளை உபதேசம் சொல்ல வந்துள்ளேன் என்றார்.

கௌரவர்களிடமிருந்து உங்கள் நாட்டையும் ஆட்சியையும் கைப்பற்ற வேண்டும் என்ற ஆசையின் விளைவு பாவம். நாட்டை ஆளவேண்டும் என்ற ஆசையால் உங்களுக்கும் துரியோதனனுக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமல் போய்விடும் என்று கூறினார். முனிவர் கௌரவர்களின் சூழ்ச்சியால் தான் இங்கு வந்துள்ளார் என்பதை தருமன் புரிந்து கொண்டான். முனிவரே! பழியை அழித்துப் புகழை நிலை நாட்டுவது தான் எங்களின் தவம், இது முறையான ஆசை தான். இந்திரப்பிரஸ்தம் எங்களுக்கு தான் சொந்தம் அதனை யாரிடமும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றான் தருமன்.

கண்ணனும், தருமனும் போர் செய்வதைத் தவிர வேறெதையும் நாங்கள் விரும்பவில்லை என்று முடிவாகக் கூறி சஞ்சய முனிவரை அனுப்பினார்கள். சஞ்சயன் திருதராட்டிர மன்னரிடம் சென்று பாண்டவர்கள் கூறிய பதிலைச் சொன்னார். இதைக் கேட்டு திருதராட்டிரன் பெரிதும் ஏமாற்றமடைந்தான்.

திருதிராட்டிரன் விதுரரை அழைத்து அவருடைய கருத்தை கூறும்படி கேட்டான். விதுரர் பல்வேறு நீதிகளைக் கூறினார். பாண்டவர்கள் வீரம் மட்டும் அல்லாமல் அவர்கள் செய்த தர்மம்தான் அவர்களின் உன்னத படை என்றார். திருதிராட்டிரன் விதுரர் கூறியது உண்மை என்பதை அறிந்தாலும் புத்திரப் பாசத்தால் மதி இழந்து தடுமாறினார். பீ;மர் கர்ணனிடம் இன்னும் காலம் கடத்தாமல் பாண்டவர்களின் நாட்டை திருப்பிக் கொடுத்து விடுங்கள். இல்லை என்றால் யுத்தத்தில் அனைவரும் மாண்டுவிடுவோம் என்றார்.

ஆனால், வழக்கம் போல பீ;மரை கர்ணன் பழித்துப் பேசினான். இவர் நம்முடன் இருந்தாலும் பாண்டவர்கள் வசமே இவரின் மனம் உள்ளது என்றான். யுத்தம் வந்தால் நான் ஒருவனே பகைவன் அனைவரையும் அழிப்பேன் என்று கர்ணன் கூறினான். பீ;மர் கர்ணனிடம் உன் வீரம் அனைவருக்கும் தெரியும் வீணாக பேசாதே என்றார். அதற்கு கர்ணன் அர்ஜூனன் பற்றி பெரிதாக இவர் நினைக்கிறார். இவர் அர்ஜூனனிடம் தோல்வி அடையும் வரை நான் போருக்கு செல்ல மாட்டேன். பின்பு நானே அர்ஜூனனை போரில் கொல்வேன் என்று கூறி சபையிலிருந்து கர்ணன் வெளியேறினான்.

திருதிராட்டிரன் துரியோதனனிடம் பிடிவாதத்தை விடுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் எவ்வளவு கூறியும் அவன் கேட்கவில்லை. தந்தையே! நான் அனைத்து வியமும் அறிந்தவன். இந்த பாண்டவர்கள் சூதாடித்தோற்ற போதே ஏன் போருக்கு கிளர்ந்து எழவில்லை. சபதம் என்ற பெயரில் வீரவாதம் புரிந்தனர். தருமன் ஒரு முறை சூதில் தோற்றான். மீண்டும் இரண்டாம் முறை ஏன் சூதாட வேண்டும். கிரு;ணனின் துணை இப்போது இருப்பதால் தான் போரிடத் தயாராக உள்ளோம் என்கிறார்கள். போர் தொடங்கட்டும் பார்ப்போம். அவர்களுக்கு வெற்றி கிடைக்கும் என நான் எண்ணவில்லை. தந்தையே! 5 ஊசிமுனை அளவு நிலம் கூட அவர்களுக்கு நான் தரமாட்டேன் என்று கூறிக் கர்ணனைப் போல் அவனும் அவையை விட்டு வெளியேறினான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்