Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 28 ஏப்ரல், 2020

தினமும் யோகா..!

இன்றைய காலக்கட்டத்தில் நம்முடைய உடலையும், மனதையும் ஆரோக்கியமாக வைக்க உதவுவதில் முக்கிய பங்கு வகிப்பது யோகா. நம்மில் பல பேர் பல நாட்கள் திட்டம் போட்டு இருப்போம், இன்று முதல் தினந்தோறும் யோகா செய்ய வேண்டும் என்று, ஆனால் அவை அனைத்து வெறும் திட்டமாகவே இருந்துவிடும்.

இதற்கு என்ன காரணம்? என்று கேட்டால் அனைவரும் நேரம் இல்லை என்ற ஒரு ரெடிமேட் பதிலை வைத்து இருப்போம்.

ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் உங்களுக்கு அளவுக்கு அதிகமாகவே நேரம் இருக்கிறது. தினமும் ஐந்து முதல் பத்து நிமிடம் செய்தாலே போதும், அவை உங்கள் வாழ்க்கையின் அன்றாட பழக்கமாகவே மாறிவிடும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

தினமும் யோகா :

1. பிராணாமாசனம் :

✅நமது கால்களை ஒன்றாக வைத்து இரு பாதங்களும் உடலின் எடையை சமநிலையாக தாங்கும்படி இருக்க வேண்டும். மூச்சை உள்ளிழுக்கும்போது இரு கைகளை பக்கவாட்டில் உயர்த்த வேண்டும். பின்பு மூச்சை வெளிவிடும்போது உள்ளங்கை இரண்டும் வணங்கும் நிலையில் வைக்க வேண்டும்.

2. அஷ்டாங்க நமஸ்காரம் :

✅மெதுவாக நமது முட்டிகளை தரையில் கொண்டு வந்து மூச்சை வெளியே விட வேண்டும். இடுப்பை கொஞ்சம் பின்னால் நகர்த்தி முன்புறம் சரிவாக முகத்தை தரையில் வைக்க வேண்டும். பின்புறம் சற்று மேலோங்கி இருக்க வேண்டும். இரு பாதங்களும் உள்ளங்கைக்கு இடையே சரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

3. ஞான முத்திரை :

✅இதில் வாயுவையும், அக்னியையும் சேர்ப்பது போல் ஆள்காட்டி விரலின் நுனியால் கட்டை விரல் நுனியை தொட வேண்டும். மற்ற விரல்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

4. அபான முத்திரை :

✅நடு விரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்ட விரலின் அடிப்பகுதியை தொட வேண்டும்.

யோகாவின் பயன்கள் :

👉தசைகளுக்கு நல்ல உடற்பயிற்சி, நரம்பு மண்டலத்தை தூண்டி புத்துணர்ச்சி கொள்ள செய்கிறது.

👉மூளையில் நியூரான் செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து, நினைவாற்றல் மற்றும் புத்திக்கூர்மையை அதிகப்படுத்துகிறது.

👉ஆழ்ந்த அமைதியை ஏற்படுத்தி, புதுவித உயிர்சக்தியை உணர செய்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக