Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஏப்ரல், 2020

சத்தமில்லாமல் ஆடியோ, வீடியோ ரெக்கார்டிங் செயலி Dolby On அறிமுகம்.! ஆப்பிள்-ஆண்ட்ராய்டு.





உள்ளமைக்கப்பட்ட நேரடி


Dolby On செயலி
அதன்படி வீட்டில் இருந்து பணிபுரியும் அனைத்து உள்ளடக்க படைப்பாளர்களுக்கு பயன்படும் வகையில் Dolby On செயலி ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு இலவச இசை மற்றும் வீடியோ பதிவு மற்றும் ஸ்ட்ரீமிங் பயன்பாடாக இப்போது கிடைக்கிறது

இந்த Dolby On செயலி ஆனது பல்வேறு மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும், அதேசமயம் ஸ்மார்ட்போன்களில் சில ஆடியோ சார்ந்த சிக்கல்களை தீர்க்க முடியும் என்பதே உண்மை.
அதாவது நீங்கள் எந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல் சிறந்த டால்பி ஒலி தரத்தை பயன்பாடு உறுதி செய்கிறது, மேலும் அவற்றை எளிதாக செட் அப் செய்து பயன்படுத்தலாம்.

Dolby On செயலி பொறுத்தவரை படைப்பாளர்களுக்கு அவர்களின் யோசனைகளைப் பதிவு செய்ய ஒரு முக்கியமான கருவியை வழங்குகிறது. பின்னர் அவற்றை அவர்களது நண்பர்கள் மற்றும் பிற ஒத்துழைப்பாளர்களுக்கு பகிரக்கூடிய உள்ளடக்கமாக மாற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்துவமான ஒலி
இந்த அட்டகாசமான செயலி உள்வரும் ஒலியை கேட்கிறது, பின்பு compression, EQ, limiting, சத்தம் குறைப்பு (noise reduction), stereo widening, de-essing மற்றும் இது போன்ற பல ஆடியோ விளைவுகளை தானாகவே பயன்படுத்துகிறது. . அதன்பின்னர் இன்ஸடாகிராமில் புகைப்பட ஃபில்டர்கள் போன்ற தனித்துவமான ஒலி ஸ்டைல்கள் மூலம் திருத்தலாம உங்கள் ரெக்கார்டிங்கிற்கு மிகவும் அருமையாக பயன்படும் இந்த செயலி.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால், இந்த ஆப் பயன்பாடானது படைப்பாளர்களுக்கு ஸ்டுடியோவுக்கு செல்லாமல் தங்கள் வீட்டிலிருந்தே ஆடியோ மற்றும் வீடியோ இரண்டையும் பதிவுசெய்து நேரடியாக ஒளிபரப்ப உதவுகிறது. மேலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த வேளையில் இது மிகவும் முக்கியத்தும் வாயந்த ஒரு விஷயம் ஆக உள்ளது என்றுதான் கூறுவேண்டும்.

இந்த புதிய ஆப் பயன்பாட்டின் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பதிப்புகள் இந்;தியாவில் முறையே ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும்ஆண்ட்ரர்ய்டு கூகுள் பிளே ஸ்டோரிலும் இலவசமாகக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக