பேஸ்புக் நிறுவனம் மெசஞ்சர் நிறுவனத்தின் அடுத்தக்கட்டமான டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இது பேஸ்புக் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேஸ்புக் பயனர்களுக்கு கணினித் திரையில் பயன்படுத்தும் வகையில் டெஸ்க்டாப் வெர்ஷனை ஆப்பிள் மேக் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் இயங்குதளத்தை வெளியிட்டுள்ளது. இனி இதன்மூலம் பேஸ்புக் பயன்பாட்டாளர் வீடியோ சாட்களை கணினி மூலம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணினி பேஸ்புக் வீடியோ சாட்
மக்கள் தங்களின் கணினி பேஸ்புக் வீடியோ சாட் பயன்பாட்டை மேற்கொள்ள முடியாமல் அதற்கென தனி பயன்பாடுகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஏற்றபடி பல தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி அறிவித்து வருகிறது.
வீடியோ கான்பிரன்ஸ் கால்
அதேபோல் வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு பிரபல ஆப்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் டெஸ்க்டாப் பிரவுசர் கொண்டு ஆடியோ, வீடியோ காலிங் பயன்பாடு 100 மடங்கு அதிகரித்து இருக்கிறது.
மேக் ஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளம்
இதையடுத்து மேக் ஒஎஸ் மற்றும் விண்டோஸ் இயங்குதளங்களை மெசஞ்சர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இனி இலவச க்ரூப் வீடியோ கால்களை மேற்கொள்ள முடியும் என மெசஞ்சர் பிரிவு துணை தலைவர் ஸ்டான் சன்னோவ்ஸ்கி தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது
இருப்பினும் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷன் குறித்த திட்டத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த அறிவிப்பானது மெசஞ்சர் நிறுவனம் தனி நிறுவனமாக மாற்றும் பணிகள் நடந்துக் கொண்டிருக்கும் போதே இந்த அறிவிப்பும் பேஸ்புக் அறிவித்தது. அதன்பின் இதுகுறித்த பிற தகவல்கள் ரகசியமாகவே இருந்தது.
கணினி மூலம் மேற்கொள்ள முடியாமல் காத்திருந்தனர்
இந்த அறிவிப்புக்கு பலருக்கும் காத்திருந்தனர். வீடியோ கால் பேஸ்புக் மெசஞ்சர் மூலம் பலரும் மொபைல் மூலம் மேற்கொண்டாலும் கணினி மூலம் மேற்கொள்ள முடியாமல் தவித்திருந்தனர். தற்போது இந்த அறிமுகம் அவர்களுக்கு பெரிதும் பயன்தரும் விதமாக இருக்கும்
பேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷன்
இந்த நிலையில் விண்டோஸ் இயங்குதளத்தில் பேஸ்புக் மெசஞ்சர் டெஸ்க்டாப் வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இதை மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்தும், மேக் வெர்ஷனை மேக் ஆப் ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்லலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக