கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் முக்கிய நகர்வாக, மின்விளக்குகளை அணைத்துவிட்டு டார்ச்லைட்டுகளை ஒளிர செய்யும் நிகழ்வு நாளை (ஏப்ரல் 5) இரவு 9 மணியளவில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் தமது செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் ஒருபுறம் விமர்சித்து வந்தாலும், மறுபுறம் இந்த நிகழ்வை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் முழுவீச்சில் ஆயத்தமாகி வருகிறது.
இதனை உறுதிசெய்யும் விதமாக, தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தின் சென்னை வட்டத்தில் பணியாற்றும் செயற்பொறியாளர்கள் உள்ளி்ட்ட அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதில், " அனைத்து செயற்பொறியாளர்களும் ஏப்ரல் 5 ஆம் தேதி, இரவு 8 மணி முதல் 10: 30 மணி வரை, தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவவகத்தில் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் தங்களுக்கு கீழ் போதுமான பணியாளர்கள் இருப்பதையும் செயற்பொறியாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மின்தேக்கிகள் தங்குதடையின்றி செயல்படுவதை செயற்பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக