Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 ஏப்ரல், 2020

சூப்பர் பட்ஜெட் விலையில் ரெட்மி 8A ப்ரோ அறிமுகம்; ஆனால்..!


Redmi 8A Dual

சியோமி நிறுவனம் ரெட்மி 8A ப்ரோ எனும் சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போனை இந்தோனேஷியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 8A டூயல் ஸ்மார்ட்போனின் மறுபெயரிட்ட பதிப்பாகும். இந்த ரெட்மி ஸ்மார்ட்போன் ஆனது 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, ஆரா எக்ஸ் கிரிப் வடிவமைப்பு, பின்புற பேனலில் ஒரு மெஷ் அமைப்பு மற்றும் P2i நானோ பூச்சு போன்ற விலையை மீறிய அம்சங்களை கொண்டுள்ளது.


ரெட்மி 8ஏ ப்ரோ இரண்டு சேமிப்பு வகைகளில் வெளியாகியுள்ளது - 2 ஜிபி + 32 ஜிபி மற்றும் 3 ஜிபி + 32 ஜிபி ஆகும். இதன் 2 ஜிபி ரேம் வேரியண்டின் விலை இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.7,100 ஆகும். மறுகையில் உள்ள 3 ஜிபி ரேம் வேரியண்டின் விலை தோராயமாக ரூ.7,600 ஆகும். இந்த இரண்டு மாடல்களும் மிட்நைட் கிரே, சீ ப்ளூ மற்றும் ஸ்கை வைட் ஆகிய மூன்று வண்ண வகைகளில் வாங்க கிடைக்கும்.

ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே:

டூயல் சிம் ஆதரவு கொண்ட ரெட்மி 8ஏ ப்ரோ ஆனது ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான நிறுவனத்தின் சொந்த MIUI 11 கொண்டு இயங்குகிறது. இது 19: 9 என்கிற அளவிலான திரை விகிதம் கொண்ட 6.22 இன்ச் அளவிலான எச்டி+ (720x1520 பிக்சல்கள்) டிஸ்ப்ளேவை, டாட் நாட்ச் வடிவமைப்பின் கீழ் பெற்றுள்ளது. சியோமி நிறுவனம் இதை ஒரு வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் என்று குறிப்பிடுகிறது. இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பையும் கொண்டுள்ளது.

ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் ப்ராசஸர், கேமராக்கள்:

இந்த புதிய ரெட்மி ஸ்மார்ட்போனில் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 439 SoC உள்ளது, இது 3 ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு அம்சமாக அதன் டூயல் ரியர் கேமரா அமைப்பு திகழ்கிறது. இந்த கேமரா அமைப்பில் 13 மெகாபிக்சல் அளவிலான மெயின் கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார் ஆகியவைகள் உள்ளது. சுவாரசியமாக இது AI போர்ட்ரெயிட் மோட் மற்றும் AI ஸீன் டிடெக்ஷன் மோட் ஆகியவைகளை ஆதரிக்கிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, ரெட்மி 8ஏ ப்ரோ ஆனது ஒரு 8 மெகாபிக்சல் அளவிலான கேமராவை கொண்டுள்ளது. இது AI செல்பீ போர்ட்ரெய்ட் மற்றும் AI ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனின் இணைப்பு மற்றும் சென்சார் ஆதரவுகள்:

ரெட்மி 8ஏ ப்ரோவில் 32 ஜிபி அளவிலான இன்டர்னல் மெமரி உள்ளது. மேலும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை மெமரி நீட்டிப்பை வழங்கும் பிரத்யேக ஸ்லாட்டும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, 4ஜி வோல்டிஇ, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஹெட் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது. சென்சார்களை பொறுத்தவரை, அக்ஸலரோமீட்டர், ஆம்பியன்ட் லைட், மேக்னோமீட்டர் மற்றும் ப்ராக்சிமிட்டி சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் வயர்லெஸ் எஃப்எம் ரேடியோ ஆதரவுடன் வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரெட்மி 8ஏ ப்ரோ பேட்டரி:

சியோமி நிறுவனம் அதன் ரெட்மி 8ஏ ப்ரோ ஸ்மார்ட்போனில் மிகப்பெரிய 5,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது, சுவாரசியமான விடயம் என்னவென்றால் இது 18W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அளவீட்டில், 156.48x75.41x9.4 மிமீ மற்றும் 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக