Honor Play 4T Pro, Honor Play 4T சீரிஸ் போன்களை பல்வேறு சிறப்பம்சங்களோடு ஹூவாய் துணை பிராண்ட் ஹானரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஹானர் நிறுவனம் தனது புதிய ஹானர் பிளே 4டி என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹானர் ப்ளே 4 டி புரோ மாடலானது வாட்டர் டிராப்-வசதியுடனும், ஹானர் ப்ளே 4 டி பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளே வசதியை கொண்டுள்ளது. ஹானர் ப்ளே 4 டி ப்ரோவில் மூன்று பின்புற கேமரா அமைப்பும் கொண்டுள்ளது.
ஹானர் ப்ளே 4 டி புரோ, ஹானர் ப்ளே 4 டி விலை, கிடைக்கும் விவரங்கள்
ஹானர் 4 டி புரோ போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. அதோடு இது தோராயமாக ரூ.16,200 என நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி போனானது ரூ.18,400-க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்போடுகிறது. அதோடு ஹானர் 4டி புரோ போனானது ப்ளூ எமரால்டு மற்றும் பிளாக் கலர் விருப்பங்களில் வெளியாகியுள்ளது.
அதேபோல் ஹானர் ப்ளே 4டி போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட போனானது ரூ.12,900-க்கு விற்கப்படாலம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஸ்மார்ட் போனானது பிளாக் மற்றும் எமலால்டு கலரில் விற்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹானர் பிளே 4 டி புரோ மற்றும் ஹானர் ப்ளே 4 டி
இந்த வகை போன்களானது ஏப்ரல் 14 ஆம் தேதி முன்பாகவே விற்பனைக்கு வரும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவக்கப்படுகிறது.
ஹானர் பிளே 4 டி புரோ மற்றும் ஹானர் ப்ளே 4 டி ஆகியவற்றின் உலகளாவிய விற்பனை விலை விவரங்கள் குறித்த முழு விவரங்கள் தற்போது வரை வெளிவரவில்லை.
ஹானர் ப்ளே 4 டி புரோ விவரக்குறிப்புகள், அம்சங்கள்
டூயல் சிம் (நானோ) , ஆண்ட்ராய்டு 9 பை மூலம் இயக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனில் 6.3 இன்ச் ஃபுல்-எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) ஓஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் வளைந்த கண்ணாடி பாதுகாப்பு அமைப்பு கொண்டுள்ளது.
டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு
தொலைபேசியில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பானது 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் எஃப் / 1.8 லென்ஸ், 8 மெகாபிக்சல் செகண்டரி சென்சார் மற்றும் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் எஃப் / 2.4 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் கேமரா கொண்டுள்ளது.
மைக்ரோ எஸ்.டி கார்டு
மைக்ரோ எஸ்.டி கார்டு (256 ஜிபி வரை) வரை விரிவாக்கக்கூடியது. அதேபோல் 128 ஜிபி உள் சேமிப்பை ஹானர் வழங்கியுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவை அடங்கும். அதேபோல் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது.
4,000 எம்ஏஎச் பேட்டரி
ஹானர் ப்ளே 4 டி ப்ரோ 4,000 எம்ஏஎச் பேட்டரியை 22.5W வேகமான சார்ஜிங் வசதியையும் கொண்டுள்ளது. அதேபோல் 157.4x73.2x7.75 மிமீ அளவையும் 165 கிராம் எடையும் கொண்டது.
ஹானர் ப்ளே 4 டி விவரக்குறிப்புகள், அம்சங்கள்
இரட்டை சிம் (நானோ) சிம் கார்டு, ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களா பதிவு செய்ய, இந்த ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு உள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் ஆகியவை அடங்கும் - எல்இடி ப்ளாஷ் உடன் இயக்கப்படுகிறது. அதோடு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவும் உள்ளது.
512 ஜிபி வரை விரிவாக்க அம்சம்
மைக்ரோ எஸ்.டி கார்டு (512 ஜிபி வரை) வரை விரிவாக்கக்கூடியது என்றாலும் இதில் 128 ஜிபி உள் சேமிப்பு வசதியை ஹானர் வழங்கியுள்ளது. அதோடு இணைப்பு விருப்பங்களில் 4 ஜி எல்டிஇ, புளூடூத் வி 5.0 மற்றும் மைக்ரோ-யூ.எஸ்.பி ஆகியவை அடங்கும். அதேபோல் இதில் பின்புறமாக பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் ஆகியவை அடங்கும். ஹானர் ப்ளே 4 டி 10W சார்ஜிங் வசதியோடு 4,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 159.81 × 76.13 × 8.13 மிமீ அளவும் 176 கிராம் எடையும் கொண்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக