>>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • >>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    சனி, 9 மே, 2020

    மெய்ஸூ 17 மற்றும் 17ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.! என்னென்ன அம்சங்கள்.!

    மெய்ஸூ நிறுவனம் நீண்டநாட்களுக்கு பிறகு மெய்ஸூ 17 மற்றும் மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இரண்டு ஸ்மார்ட்போன்களும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது, எனவே இந்த ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் முழு விவரங்களையும் பார்ப்போம்.

    மெய்ஸூ 17 மற்றும் மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்கள் 6.6-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED HDR10 + டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் 2340 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் உள்ளிட்ட பல்வேறு ஆதரகளை கொண்டுள்ளன.

    மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஸ்னாப்டிராகன்865 பிராசஸர் உடன் அட்ரினோ 650ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த

    மெய்ஸூ 17 மற்றும் மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போன்கள்

    மெய்ஸூ 17 ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 12எம்பி டெப்த் லென்ஸ் +5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

    மெய்ஸூ 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 32எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிளஸ் லென்ஸ்+ 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 3எம்பி சாம்சங் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

    இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 5G SA/NSA Dual 4G VoLTE,வைஃபை,புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், என்.எஃப்.சி,யூ.எஸ்.பி டைப்-சி போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் சிறந்ததொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளன.

    அட்டகாசமான விலை இந்தியமதிப்பில்...

    8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட மெய்ஸூ 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.39,510-ஆக உள்ளது.

    8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி கொண்ட மெய்ஸூ 17 ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,720-ஆக உள்ளது.

    8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.45,930-ஆக உள்ளது.

    12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி கொண்ட மெய்ஸூ 17ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.50,200-ஆக உள்ளது.

    விரைவில் இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக