வோடபோன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக 2 ஜிபி கூடுதல் டேட்டா திட்டங்களில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.
முன்னதாக ரூ. 399 மற்றும் ரூ. 599 சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்கப்பட்ட நிலையில் இதனைத்தொடர்ந்து ரூ. 299, ரூ. 449 மற்றும் ரூ. 699 பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகைகளில் இருமடங்கு டேட்டா வழங்குவதாக அறிவித்தது.
இந்த இருமடங்கு டேட்டா டெல்லி, மத்திய பிரதேசம், மும்பை, கொல்கத்தா, மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ராஜஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட வட்டாரங்களில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இந்த சேவை நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளது.
ரூ. 299 ப்ளான்:
ரூ. 299 விலையில் 4 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 449 ப்ளான்:
ரூ. 449 விலையில் 4 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ரூ. 699 ப்ளான்:
ரூ. 699 விலையில் 4 ஜிபி டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக