>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 1 ஜூலை, 2020

    2-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

    நவகிரகங்களில் எந்தவொரு கிரகத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு சனிக்கு உண்டு. சனிபகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும். ஒரு லக்னத்திலிருந்து இன்னொரு லக்னத்திற்கு செல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே. ஏழரைச்சனி, அஷ்டமச்சனி ஆகியவற்றின் வழியாக வாழ்க்கையின் அனுபவத்தையும், புரிதலையும் தரக்கூடியவர்தான் சனிபகவான்.

    ஒருவரின் ஜாதகத்தில் சனி நீசம் அடைவது ஒருவிதத்தில் யோகப் பலனாகவே பார்க்கப்படுகிறது. கடினமான உழைப்பையும், அலைச்சலையும் தரக்கூடிய கிரகம் சனி.

    நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டனை தந்து நம்மை நல்வழிப்படுத்துபவர் சனிபகவான்தான். வேகமாகச் செல்லும் நம் வாழ்க்கை சக்கரத்தை தடுத்து நிறுத்தி, நாம் எதற்காக இந்த பூமிக்கு வந்தோம்? நம் இலக்கு எது? என்பதை நமக்கு உணர வைப்பவர்.

    லக்னத்திற்கு 2-ம் இடத்தில் சனி இருந்தால் அந்த ஜாதகக்காரர்கள் வாதம் புரிவதில் வல்லவர்கள்.

    2-ல் சனி இருந்தால் என்ன பலன்?

    👉 தடைபட்ட கல்வியை உடையவர்கள்.

    👉 உறவுகளிடத்தில் மனக்கசப்புகள் ஏற்பட்டு மறையும்.

    👉 கண் பார்வை சார்ந்த பிரச்சனைகள் தோன்றி மறையும்.

    👉 கல்வி நிலையில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும்.

    👉 சிலருக்கு திக்கிப்பேசும் குறைபாடு இருக்கும்.

    👉 எதிர்பாலின மக்களின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும்.

    👉 முரட்டுத்தனமான செயல்பாடுகளை உடையவர்கள்.

    👉 பிடிவாத குணம் கொண்டவர்கள்.

    👉 சமூகத்தோடு ஒத்துப்போகாதவர்கள்.

    👉 கஞ்சத்தனம் மிக்கவர்கள்.

    👉 நிதானமான நடவடிக்கையை கொண்டவர்கள்.

    👉 வித்தியாசமான சிந்தனைகளை உடையவர்கள்.

    👉 தர்ம வழியில் நடக்கக்கூடியவர்கள்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக