இந்தியாவின் மிகப்பெரும் நெட்வொர் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல்
நிறுவனத்தில் முதலீடு செய்ய அமேசான் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் வேகமெடுத்துள்ள சூழலில் நெட்வொர்க் சேவை நிறுவனங்களும் அதற்கேற்றவாறு தங்கள் சேவைகளை மேம்படுத்தி வருகின்றன. இந்தியாவை பொறுத்த வரை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ளன. சமீபத்தில் ஜியோ நிறுவனத்தில் பல வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.
இந்நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்தில் 14,000 கோடி முதலீடு செய்ய அமேசான் நிறுவனம் முன்வந்துள்ளது. இதுகுறித்து ஏர்டெல் நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில் ஒப்பந்தம் உறுதியானால் ஏர்டெல்லின் 5 சதவீத பங்குகளை அமேசான் பெறும் என கூறப்படுகிறது.
சமீப காலத்தில் ஆன்லைன் விற்பனை மூலம் இந்தியாவில் முக்கிய இடத்தை பிடித்த அமேசான் தனது ப்ரைம் வீடியோ மூலம் பல வாடிக்கையாளர்களை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக