Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜூலை, 2020

ஜூலை 21 ஆம் தேதி ரூ.10,000 பட்ஜெட்ல அறிமுகமாகும் தரமான போன்!

Infinix Smart Plus 4

ஜூலை 21 ஆம் தேதி இந்தியாவில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் என அழைக்கப்படும் ஒரு புதிய ஸ்மார்ட்போனை இன்பினிக்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. என்ன விலை, என்னென்ன அம்சங்கள்...


இன்பினிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. அது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் மாடல் ஆகும் மற்றும் இது கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸின் வாரிசாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.

இன்பினிக்ஸ் நிறுவனத்தின் செய்திக்குறிப்பின்படி, இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஒரு பெரிய பேட்டரி மற்றும் பெரிய டிஸ்பிளேவில் கவனம் செலுத்தும். இருப்பினும், இன்பினிக்ஸ் நிறுவனம் வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் சரியான திரை அளவு மற்றும் பேட்டரி விவரங்களை வெளியிடவில்லை.

இது தவிர, வேறு எந்த விவரத்தையும் நிறுவனம் வெளியிடவில்லை. இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஜூலை 21 ஆம் தேதி மதியம் 12 மணிக்கு (நண்பகல்) இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று பிளிப்கார்ட்டில் ஒரு பேனர் தெரிவித்துள்ளது.

இருப்பினும் கவலை வேண்டாம், ஏனெனில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது மாடல் நம்பர் இன்பினிக்ஸ்-எக்ஸ் 680 டி என்கிற பெயரின் கீழ் கூகுள் பிளே கன்சோல் பட்டியலில் காணப்பட்டது.

அதன் வழியாக நாம் சில பிரதான அம்சங்களை பற்றி அறிந்துகொள்ள முடியும். கிடைக்கப்பெற்ற பட்டியலின்படி, இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் உடன் வரும் என்றும், இது ஆண்ட்ராய்டு 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் எச்டி+ டிஸ்ப்ளே (1640 x 720 பிக்சல்கள் டிஸ்பிளே ரெசல்யூஷன்) மற்றும் 320 பிபிஐ உடன் வரும் என்றும் தெரியவந்துள்ளது. சுவாரசியமான இந்த ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்புடன் வரும்.

மேலும் புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 பிளஸ் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி 22 ப்ராசஸர் மற்றும் பவர்விஆர் ஜிஇ 8320 ஜி.பீ.யு கொண்டு இயக்கப்படும்.

விலை நிர்ணயத்தை பொறுத்தவரை இது இந்தியாவில் ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டின் கீழ் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.

முன்னதாக வெளியான இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் ஆனது 6.20 இன்ச் எச்டி+ இன்-செல் 2.5 டி கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளேவை, 1520 x 720 பிக்சல்கள் தீர்மானத்துடன் கொண்டுள்ளது. ஐ.எம்.ஜி பவர்விஆர் ஜி.பீ.யுடன் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 ப்ராசஸர் மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு உள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 3 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது மற்றும் இது ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான நிறுவனத்தின் எக்ஸ்ஓஎஸ் மூலம் இயங்குகிறது.

கேமராத்துறையை பொறுத்தவரை, பின்புறத்தில், இது 13 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 2 மெகாபிக்சல் செகண்டரி ஷூட்டர் மற்றும் குறைந்த-ஒளி சென்சார் ஆகியவற்றின் கலவையுடன் கூடிய ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. முன்பக்கத்தில், ஒரு 8 மெகாபிக்சல் அளவிலான செல்பீ ஷூட்டர் (எஃப் / 2.0) உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக