Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜூலை, 2020

அடுத்த 5 நாட்களுக்கு அமேசானில் ஆபர் மழை; என்னென்ன போன்கள்? இதோ லிஸ்ட்!

Amazon Apple Days

அமேசான் இந்தியாவில் அடுத்த ஜூலை 25 வரை நடக்கும் சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஆபர்கள் பற்றிய முழு விவரம் இதோ...

பிரபல இகாமர்ஸ் தளமான அமேசான் இந்தியாவில் நேற்று தொடங்கி அதாவது ஜூலை 19 முதல் ஆப்பிள் டேஸ் எனும் சிறப்பு விற்பனை நடந்து வருகிறது. இந்த ஸ்பெஷல் சேலின் கீழ், ஐபோன் 11 சீரிஸ் போன்ற சற்று புதிய மற்றும் ஐபோன் 8 பிளஸ் போன்ற பழைய மாடல்களின் மீது விலைக்குறைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தவிர ஆப்பிள் ஐபாட் தொடர் மற்றும் ஆப்பிள் வாட்ச் தொடர்களுக்கும் வெவ்வேறு வகையான சலுகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அமேசான் இந்தியாவில் நடக்கும் இந்த ஆப்பிள் டேஸ் விற்பனை ஆனது நேற்று தொடங்கி ஜூலை 25 வரை தொடர்கிறது.

சமீபத்திய ஐபோன் தொடரின் மீது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகளில் இருந்து தொடங்குவோம், ஐபோன் 11 மாடலின் 64 ஜிபி சேமிப்பு விருப்பமானது இந்த விற்பனையின் கீழ் ரூ.62,900 க்கு வாங்க கிடைக்கும, கடைசியாக திருத்தப்பட்டப்போது அதன் விலை ரூ.68,300 ஆகும். இதன் பொருள் இந்த அமேசான் ஆப்பிள் டேஸ் விற்பனை காலத்தில் இந்த மாடலின் மீது ரூ.5,400 என்கிற தள்ளுபடி கிடைக்கும் என்று அர்த்தம்.

மறுகையில் உள்ள ஐபோன் 11 ப்ரோ மற்றும் ஐபோன் 11 ப்ரோ மேக்ஸ் மீதான தள்ளுபடிகளை அமேசான் குறிப்பிடவில்லை, அதற்கு பதிலாக எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.4,000 தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவித்துள்ளது.

சற்றே பழைய ஐபோன் 8 பிளஸ் மாடலின் 64 ஜிபி வேரியண்ட் ஆனது இந்த ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது ரூ.41,500 க்கு வாங்க கிடைக்கும். இதன் அசல் விலை ரூ.41,999 ஆகும், அதாவது இந்த விற்பனையின் போது ரூ.500 என்கிற தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஐபோன் 7 சீரிஸ் மாடல்களும் இந்த விற்பனையின் போது கவர்ச்சிகரமான விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. பெரும்பாலான சாதனங்கள் நோ காஸ்ட் ஈ.எம்.ஐ போன்ற விருப்பங்கள் மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி கூடுதல் தள்ளுபடி போன்ற சலுகைகளை பெற்றுள்ளது.

இந்த ஆப்பிள் டேஸ் விற்பனையின் போது, ஆப்பிள் ஐபாட் சீரிஸ் மீது ரூ.5,000 தள்ளுபடி கிடைக்கும் மற்றும் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3-ஐ வாங்க எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பயனர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடி கிடைக்கும்.

மேலும் எச்.டி.எஃப்.சி வங்கி அட்டை வைத்திருப்பவர்கள் ஆப்பிள் மேக்புக் ப்ரோ வாங்குவதற்கு ரூ.7,000 என்கிற இன்ஸ்டன்ட் தள்ளுப்படி கிடைக்கும். இந்த அனைத்து விற்பனை சலுகைகளும் இப்போது அமேசான் இந்தியாவில் ஒரு பிரத்யேக பக்கத்தில் நேரலையில் உள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக