Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 20 ஜூலை, 2020

குடோனில் தீ விபத்து .... 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா 45 வயதான இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விவசாயம் செய்துவருகிறார், தான் விவசாயம் செய்யும் மலர்கள் மற்றும் காய்கறிகள் அனைதையும் சாகுபடி செய்து கேரளா மற்றும் கர்நாடகவிற்கு அனுப்பி வந்தார், இந்நிலையில் காய்கறிகள் மற்றும் மலர்கள் பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தையும் வைக்க ஒரு குடோன் ஒன்றை வைத்தார்.
இந்நிலையில் புதிய வீடு கட்டுவதற்கு தேவையான ஜன்னல் மற்றும்பல்வேறு மர பொருட்களையும் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது, இதனால் கிருஷ்ணப்பா காவல்துறையில் தகவல் கூறியுள்ளார், இதனால் காவல்துறையினர் தீ விபத்து எப்படி நடந்தது என்று குறித்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!