Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 20 ஜூலை, 2020

எந்தெந்த கடவுளை எத்தனைமுறை சுற்றிவந்து வணங்கவேண்டும்...?

Spirituality
பிரகார வலம் எப்போதும் இடமிருந்து வலமாக வரவேண்டும். ஒவ்வொரு கடவளுக்கும் இத்தனைமுறைத்தான் வலம் வர வேண்டும் என்பது ஐதீகம்.
அரச மரத்தை சுற்றும்போது ஏழுமுறை வலம் வரவேண்டும். மேலும் அதிகாலையில், தம்பதியராக சுற்றுவதால் நல்ல பலன் கிடைக்கும். சனிக்கிழமைகளில் அரசமரத்தை சுற்றுவது மிகவும் நல்லது.
விநாயகரை ஒரு முறை வலம் வரவேண்டும்.
ஈஸ்வரனையும், அம்பாளையும் மூன்று முறை வலம் வரவேண்டும்.
சூரியனை இரண்டுமுறை வலம் வரவேண்டும்.
நவக்கிரகங்களை ஒன்பது முறை வலம் வரவேண்டும்.
மகான்களின் சமாதியை நான்கு முறை வலம் வரவேண்டும்.
தோஷ நிவர்த்தியாக பெருமாளையும், தாயரையும் நான்கு முறை வலம் வரவேண்டும். கோவிலில் உள்ள ஆலய பலிபீடம், கொடிமரம் முன்புதான் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும்.
பெருமாள் கோவிலில் நான்கு முறை வலம்வர வேண்டும்.
ஆண்கள் அஷ்டாங்கப் பணிவு (சாஷ்டாங்கமாக) என்ற முறையிலும், பெண்கள் பஞ்சாங்கப்பணிவு (குணிந்து) என்ற முறையிலும் விழுந்து வணங்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக