கொரோனா பாதிப்பினால் பொது முடக்க
அறிவிப்பை அடுத்து மூடப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட அன்லாக் ஆக்ஸ்ட மாதம்
தொடங்குகிறது.ஆனால், இதில் கல்லூரிகள் திறக்கப்படாது என கூறப்பட்டுள்ளது. இதனால்
மாணவர்கள் கல்வி பாதிக்காமல் இருக்க ஆன்லைன் வகுப்புகளை தொடர மாநில உயர் கல்வித்
துறை உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதி செமஸ்டர் பயின்று
வந்த மாணவர்கள் தவிர, அனைத்து மாணவர்களையும், தேர்வு இல்லாமலேயே, அடுத்த
கல்வியாண்டிற்கு தேர்ச்சி செய்துள்ளது அரசு.
கல்லூரிகளை மீண்டு திறத்தல்,
பாடதிட்டங்களை குறைத்தல், ரத்து செய்யபப்ட்ட தேர்வுகளுக்கான மதிப்பெண்ணை வழங்குதல்
போன்ற விஷயங்கள் தொடர்பாக ஆலோசனை செய்ய, உயர் கல்வி துறை, பல்கலைகழக துணை
வேந்தர்களுடன் ஆன்லைன் கூட்டம் ஒன்றை நடத்தியது. இந்த கூட்டத்திற்கு, உயர் கல்வித்
துறை அமைச்சர், திரு.கே.பி.அன்பழகன் மற்றும் உயர் கல்வித் துறை செயலர் அபூர்வா,
கூட்டாக தலைமை தாங்கினர்.
இந்த கூட்டத்தில், இரண்டாம் ஆண்டு
மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 3ம் தேதி முதல், ஆன்லைன் வகுப்புகளை
தொடங்க முடிவு செய்யப்பட்டது. ஒரு செம்ஸ்டருக்கான பாட திட்டத்தை நிறைவு
செய்ய குறைந்தது 90 வேலை நாட்கள் அல்லது 450 மணி நேர வகுப்பு நேரங்கள் தேவை என்ற
நிலையில், தற்போதுள்ள நிலையை கருத்தில் கொள்ளும் போது 90 வேலை நாட்கள் சாத்தியம்
இல்லை என்பதால், 450 மணி நேர வகுப்புகள் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக, உயர்
கல்வித் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக